கடத்தல் மன்னன் தேவசகாயத்துக்கு ஜனனி வச்ச ஆப்பு... எதிர்பாரா ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்

Published : Feb 10, 2026, 10:40 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தேவசகாயத்தின் பிடியில் இருந்து தப்பிக்க ஜனனி மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளார். அதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

PREV
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியை தேவசகாயம் என்பவர் சிறைபிடித்து வைத்திருக்கிறார். ஜனனி ரெளடிகளிடம், இருந்து தப்பித்து சென்றபோது தேவசகாயத்தின் காரில் மோதி மயக்கம் போட்டு விழ, அவரை தன்னுடைய பங்களாவுக்கு அலேக்காக தூக்கி வந்து அடைத்து வைத்திருக்கிறார் தேவசகாயம். ஆரம்பத்தில் தன்னை ஒரு நேர்மையானவன் போல் காட்டிக் கொண்டார் தேவசகாயம். ஆனால் அவரது வீட்டில் பல்வேறு மர்மங்கள் மறைந்திருப்பதை உணர்ந்த ஜனனி, அங்கிருந்து வெளியேற முயற்சித்து வருகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
ஜனனியின் உடல் உறுப்புகளை திருட திட்டம்போடும் தேவசகாயம்

ஜனனியை வெளியே செல்ல விடாமல் அடைத்து வைத்திருக்கிறார் தேவசகாயம். அதுமட்டுமின்றி அவர் போட்ட ஊசியால், ஜனனியால் நடக்கக் கூட முடியவில்லை. அப்படி இருக்கையில் தனக்கு ஜூஸ் கொடுக்க ரூமுக்கு வந்த வேலைக்கார பெண் வசந்தி கையில் இருந்த வாக்கி டாக்கியை அலேக்காக அபேஸ் பண்ணிய ஜனனி, அதன் வாயிலாக தேவசகாயத்தில் ஒட்டுமொத்த பிளானையும் கேட்டுவிடுகிறார். அவர் உடல் உறுப்புகளை திருடி விற்கும் கும்பலைச் சேர்ந்தவர் என்பதை, அவர் தன்னை கொலை செய்து தன்னுடைய உடல் உறுப்புகளை திருட உள்ளதையும் கேட்டுவிடுகிறார் ஜனனி.

35
தேவசகாயத்தை லாக் பண்ணும் ஜனனி

தனக்கு முன்னதாக அவுட் ஹவுஸில் உள்ள பெண்ணின் உடல் உறுப்புகளை திருட தேவசகாயம் திட்டமிட்டிருப்பதையும் அறியும் ஜனனி, அந்த பெண்ணையும் காப்பாற்ற வேண்டும் என முடிவெடுக்கிறார். இதையடுத்து ரூமுக்குள்ளே பிளான் போடும் ஜனனி, அந்த அவுட் ஹவுஸிற்கு டாக்டர்கள் செல்வதை பார்த்துவிடுகிறார். அந்த நேரத்தில் தேவசகாயமும் தன்னுடைய ரூமுக்கு வருவதை அறியும் ஜனனி, தூங்குவது போல நடிக்கிறார். அவர் தன் அருகில் வந்ததும், அவரை அடித்து, ரூமில் அடைத்து வைத்துவிட்டு, அவுட் ஹவுஸில் இருக்கும் பெண்ணையும் காப்பாற்ற திட்டமிட்டிருக்கிறார்.

45
ரேணுகா, நந்தினி கொடுத்த பதிலடி

மறுபுறம் வீட்டில் கதிர் மற்றும் ஞானம் வழக்கம்போல், தங்களுடைய பொண்டாட்டிகளிடம் பிரச்சனை செய்கிறார். ஞானம், தன்னுடைய மகளை அழைச்சுட்டு வா என ரேணுகாவிடம் சொல்ல, அதற்கு அவர் நான் ரெண்டு கேள்வி கேக்குறேன். அதுக்கு பதில் சொன்னீங்கனா அழைச்சுட்டு வர்றேன் என சொல்லி. உங்க மகள் எந்த வகுப்பில் படிக்கிறார். அவளுடைய வயசு என்ன என கேட்க, ஞானம் பேந்த பேந்த முழிக்கிறார். இதுகூட தெரியாதவன் அப்பனா இருக்க தகுதியே இல்லாதவன் என சொல்லி நோஸ் கட் பண்ணுகிறார் ரேணுகா.

55
விசாலாட்சிக்கு என்ன ஆச்சு?

அதேபோல் நந்தினியும் கதிரை பார்த்து, உனக்கும் புள்ள வேணுமா, அவளோட சேர்ந்து பெத்துக்கோ என அறிவுக்கரசியை காட்டுகிறார். இதனால் கடுப்பாகும் கதிர் நந்தினியை அடிக்கிறார். அந்த நேரத்தில் விசாலாட்சி மயக்கம் போட்டு விழுந்துவிட, அவரை அவசர அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறார்கள். பின்னர் சிகிச்சி முடித்து விசாலாட்சியை வீட்டுக்கு அழைத்து வரும் நந்தினி, பெத்த அம்மா முடியாம கிடக்கு நீ உக்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்க என கேட்க, அம்மா அம்மானு உருகுன அண்ணனையே தூக்கிப்போட்டுட்டு உங்ககூட ஒட்டிக்கிச்சு, இதுல நாங்க வேற வந்து உங்ககிட்ட உருகனுமாக்கும் என திமிறாக பேசுகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories