எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருக்கும் ஆதி குணசேகரன் இனி வீட்டுக்கே வர மாட்டார் என சாமியாடி கூறி இருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, நந்தினி, ரேணுகா ஆகியோர் தமிழ் சோறு என்கிற பெயரில் புது பிசினஸ் ஒன்றை தொடங்க இருக்கிறார்கள். அந்த பிசினஸுக்கான திறப்பு விழாவை தடுக்க ஆதி குணசேகரன் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறார். குறிப்பாக அது தன்னுடைய சொத்து என காரணம் காட்டி அவர்களை வீட்டை விட்டே விரட்ட முயன்றார். ஆனால் சரியான நேரத்தில் வந்து சொத்து பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அப்பத்தா. இதனால் செய்வதறியாது திக்குமுக்காடிப் போய் இருக்கிறார் ஆதி குணசேகரன். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
சாமியாடி சொன்ன அதிர்ச்சி தகவல்
இந்த நிலையில், விசாலாட்சியை பார்க்க அவரது தம்பி, சாமியாடி வீட்டுக்கு வருகிறார். இதை வாசலிலேயே பார்த்த தர்ஷினி, உங்க புரோ தான் வந்திருக்காரு என விசாலாட்சியிடம் சொல்ல, அருகில் இருந்த ஜனனி, அவர் எதுவும் வாக்கு சொல்லாம இருந்தால் சரி என கூற, அதற்கு நந்தினி கஷ்டம் தான் என சொல்ல, விசாலாட்சியோ அதெல்லாம் அவன் ஒன்னும் சொல்லமாட்டான், நீ சும்மா இரு என தம்பிக்கு சப்போர்டாக பேசுகிறார். வழக்கம்போல் வாக்கு சொல்ல தொடங்கிய சாமியாடி, இனிமேல் உன் மூத்த மகன் குணசேகரன் இந்த வீட்டுக்கு வர்றதுக்கு வாய்ப்பே இல்லை அக்கா என சொல்ல, அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
34
துள்ளும் கதிர்
மறுபுறம், தலைமறைவாக இருக்கும் ஆதி குணசேகரன், கதிர் ஆகியோர் தமிழ் சோறு பிசினஸை தொடங்கவிடாமல் என்னவெல்லாம் செய்யலாம் என ஆலோசித்து வருகிறார்கள். அப்போது பேசும் கதிர், நாளைக்கு அவளுங்க கடையை போடுறதுக்கு முன்னாடி பெரிய சம்பவமா பண்ணிவிட்டு போயிடுறேன். இனிமே என் பொண்டாட்டி, அவன் பொண்டாட்டினு இல்லாம எல்லாரையும் தூக்குறேன் என வீர வசனம் பேசுகிறார். முந்தைய நாள் இரவு அறிவுக்கரசி போன் போட்டு கதிருக்கும், ஞானத்துக்கும் இடையே சண்டையை மூட்டிவிடும் விதமாக பேசியதை அடுத்து கதிர் இப்படி துள்ள ஆரம்பித்திருக்கிறார்.
இதையடுத்து என்ன நடக்கப்போகிறது? ஜனனி திட்டமிட்டபடி தமிழ் சோறு பிசினஸை எந்தவித தடையும் இன்றி தொடங்குவாரா? ஆதி குணசேகரன் இனி வீட்டுக்கே வர மாட்டார் என சாமியாடி சொன்ன வாக்கு பலிக்குமா? கதிர் சொல்வதைப் போல் எல்லாரையும் தூக்கப்போகிறாரா? அறிவுக்கரசியின் அடுத்த சூழ்ச்சி என்ன? தலைமறைவாக இருக்கும் ஆதி குணசேகரன், ஞானம், கதிர் ஆகியோரை போலீசார் கைது செய்வார்களா? புது வில்லன் ராணாவின் எண்ட்ரி எப்போது? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் தான் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.