எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி கோமாவில் இருந்து மீண்டு வந்திருந்தாலும் அவருக்கு மெமரி லாஸ் ஆன விஷயம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கடந்த சில மாதங்களாக கோமாவில் இருந்த ஈஸ்வரி தற்போது மீண்டு வந்திருக்கிறார். அவர் கோமாவில் இருந்து மீண்ட பின்னர் அவரைப் பார்த்த உறவினர்கள் அனைவரும் உணர்ச்சி பெருக்கில் பூரித்துப் போயினர். ஈஸ்வரியை பார்த்ததும் அனைவரும் எமோஷனலாகி கண்ணீர் சிந்தினர். சக்தி காலில் விழுந்து கதறிய காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்தது. இதன்பின்னர் உறவினர்களிடம் முக்கிய விஷயத்தை சொன்ன டாக்டர், ஈஸ்வரிக்கு மெமரி லாஸ் ஆனதாக கூறி உள்ளனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
பழசை மறந்த ஈஸ்வரி
ஈஸ்வரிக்கு கடந்த 2 ஆண்டுகளாக என்ன நடந்தது என்கிற விஷயங்கள் நினைவில் இல்லை என்றும், அவருக்கு சக்தி கல்யாணம் வரை தான் நியாபகத்தில் இருப்பதாகவும் கூறி இருந்தார் டாக்டர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நந்தினி, அப்போ அவங்களுக்கு திரும்பவும் நினைவு திரும்பாதா என கேட்கையில், அதற்கு இரண்டு நாள் ஆகலாம், அல்லது 2 ஆண்டுகள் கூட ஆகலாம் என ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார். ஈஸ்வரிக்கு மெமரி லாஸ் ஆனதால், அவரை வைத்து குணசேகரனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்கிற ஜனனியின் பிளான் மொத்தமும் வாஷ் அவுட் ஆகி உள்ளது.
34
உண்மையை போட்டுடைத்த ஜனனி
இதையடுத்து ஈஸ்வரியை சந்தித்து அனைவரும் பேசுகிறார்கள். அப்போது அவர் சக்தியை பார்த்து நீ ஹாலோபிளாக் கம்பெனிக்கு வேலைக்கு போனேல்ல வேலையெல்லாம் நல்லா போகுதா என கேட்கிறார். அவர் பழசை எல்லாம் மறந்ததை நினைத்து கண்ணீர்விட்டு அழும் ஜனனி, ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டில் உள்ள விசாலாட்சிக்கு போன் போடுகிறார். அங்கிருந்த கதிர், போனை ஸ்பீக்கரில் போட அனைவரும் உட்கார்ந்து ஜனனி பேசுவை கேட்கிறார்கள். இப்போ நான் சொல்லப்போறது எத்தனை பேருக்கு சந்தோஷமான செய்தி, யாருக்கு அதிர்ச்சியான செய்தி என்பது எனக்கு தெரியாது என கூறி, ஈஸ்வரி பழசை எல்லாம் மறந்துவிட்டதாக கூறுகிறார்.
இதைக்கேட்டதும் நிம்மதி பெருமூச்சு விடும் ஆதி குணசேகரன், இனி நம்மளை யாரும் ஜெயிலுக்கு அனுப்ப முடியாது என்கிற மிதப்பில் இருக்கிறார். பின்னர் தன்னுடைய தம்பி கதிரிடம் சொல்லி, ஆஸ்பத்திரிக்கான பில்லை கட்டுமாறு கூறுகிறார். அவரும் போன் போட்டு கட்டச் சொல்கிறார். ஈஸ்வரி பழசை எல்லாம் மறந்ததால், தன்னை யார் என்றே அவருக்கு தெரியாது என்கிற சோகத்தில் பார்கவி இருக்கிறார். மறுபுறம் விசாலாட்சி மீண்டும் வீட்டுக்கு வர உள்ள சந்தோஷத்தில் அவருக்காக கேசரி கிண்டிக் கொண்டிருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.