எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி மெமரி லாஸ் ஆனதை பயன்படுத்தி அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளார் ஆதி குணசேகரன். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கோமாவில் இருந்த ஈஸ்வரி கண்விழித்து வந்தால் ஆதி குணசேகரன் கதை காலி என அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக ஈஸ்வரிக்கு மெமரி லாஸ் ஆகி உள்ளது. அவர் குணமாகிவிட்டாலும் அவருக்கு கடந்த 3 ஆண்டுகள் என்ன நடந்தது என்பது சுத்தமாக நினைவில் இல்லை. தன் மனைவிக்கு நினைவுகள் மறந்து போனதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆதி குணசேகரன், அவருடன் நெருங்கிப் பழகி வருகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
ஈஸ்வரி உடன் வெளியே கிளம்பிய குணசேகரன்
ஈஸ்வரி தன் அருகில் வந்து படுப்பார் என எதிர்பார்த்திருந்த தர்ஷினிக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவர் ஆதி குணசேகரன் அருகிலேயே படுத்து தூங்கி இருக்கிறார். இதைப்பார்த்து ஷாக் ஆன தர்ஷினி, இரவில் பார்கவி மற்றும் ஜனனியிடம் புலம்பி இருக்கிறார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்ததும் ஈஸ்வரி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க, அவரை அழைக்கும் ஆதி குணசேகரன், அவரை வெளியே போகணும் கிளம்பி வா என அழைக்கிறார். இதைக்கேட்டதும் அங்கிருந்த விசாலாட்சியே ஷாக் ஆகிறார். பின்னர் ரெடியாகி வந்து ஆதி குணசேகரன் உடன் காரில் செல்கிறார் ஈஸ்வரி.
35
ஆதங்கப்படும் ஜனனி
இதையடுத்து மாடியில் இருந்து இறங்கி வந்த ஜனனி, அக்காவை எங்கே என விசாலாட்சியிடம் கேட்க, அவர் நடந்ததை கூறுகிறார். இதைக்கேட்டதும் ஷாக் ஆன ஜனனி, எல்லாத்தையும் பண்ணிட்டு, நல்லவர் வேஷம் போடுறாரா என குமுறுகிறார். பின்னர் மாடிக்கு சென்று மதிவதினிக்கு போன் போட்டு பேசுகிறார் ஜனனி. இந்த வீட்டில் குணசேகரன் செய்யும் அராஜகம் எல்லைமீறி செல்கிறது என வீட்டில் நடந்தவற்றையெல்லாம் கூறி கண்ணீர் சிந்துகிறார். அதற்கு மதிவதினி, ஃபீல் பண்ணாதீங்க ஜனனி, அந்த டிராமா எல்லாம் ரொம்ப நாளைக்கு நிலைக்காது எனக்கூறி அவரை கூல்டவுன் ஆக்குறார்.
சிறிது நேரத்தில் வீட்டில் யாரோ வந்திருக்கும் சத்தம் கேட்டதும், போனை கட் பண்ணிவிட்டு கீழே சென்று பார்க்கிறார் மதிவதினி. அப்போது அவரின் கணவர் ராவணன் ஹாலில் நின்று கொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் சென்று நீ எதுக்கு இங்க வந்த என கேட்கிறார் மதி. அதற்கு அவர், நான் என் மகளை பார்க்க வந்தேன் என கூறுகிறார். அதுக்காக வீட்டுக்கே வருவீங்களா என திட்டுகிறார் மதிவதினி. இதன்பின்னர் அவர் மகள் வந்ததும் இருவரும் சண்டை போடுவதை நிறுத்திவிடுகிறார்கள். இந்த ராவணன் தான் தன்னை ஆலிவரை வைத்து கடத்தினான் என்கிற உண்மை தெரிந்தால் மதிவதினி என்ன ஆக்ஷன் எடுக்கப்போகிறாரோ என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
55
வக்கீல் வைத்த ட்விஸ்ட்
மறுபுறம் வீட்டில் ஆதி குணசேகரனும் ஈஸ்வரியும் இல்லாத நேரத்தில் வக்கீல் வருகிறார். அவரை ஹாலில் அமர வைத்து கதிர், ஞானம், விசாலாட்சி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர், உங்க அண்ணன் தொடர்ந்து இந்த வீட்டுல இருக்கப் போறாரா இல்லேனா ஜெயிலுக்கு போகப் போறாரா அப்படிங்குறது எல்லாம் உங்க வீட்டு பெண்கள் கையில் தான் இருக்கிறது என கூறுகிறார் வக்கீல். இதனால் பெண்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பது உச்சக்கட்ட சஸ்பென்ஸாக இருக்கிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.