
யூடியூபர் அன்குஷ் பகுகுணா டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கி மீண்டு வந்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பதிவில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். மோசடி செய்பவர்கள் அவரை எப்படி பிணைக்கைதியாக வைத்திருந்தார்கள் என்றும் அதனால் அவருக்கு ஏற்பட்ட பண இழப்பு மற்றும் மன உளைச்சல் பற்றியும் விவரித்துள்ளார்.
“சமூக ஊடகங்களில் இருந்தும், மற்ற எல்லா இடங்களில் இருந்தும் கடந்த மூன்று நாட்களாக நான் காணாமல் போயிருந்தேன். ஒரு மோசடி கும்பல் என்னை 40 மணிநேரம் பணயக்கைதியாக வைத்திருந்தார்கள். அவர்களிடம் நான் என் பணத்தை இழந்தேன், எனது மன ஆரோக்கியத்தையும் இழந்துவிட்டேன். இப்படி நடந்ததை என்னால் நம்பவே முடியவில்லை” என்று பகுகுணா இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார்.
கூரியர் டெலிவரி தொடர்பாக +1 எனத் தொடங்கும் எண்ணில் இருந்து ஒரு போன் கால் வந்ததாக பகுகுணா சொல்கிறார். "அது ஒரு சர்வதேச எண் போல் தோன்றியது. அதிகம் யோசிக்காமல் எடுத்தேன். உங்கள் கூரியர் டெலிவரி ரத்துசெய்யப்பட்டதாக தானியங்கி குரலில் கூறப்பட்டது. உதவிக்கு பூஜ்ஜியத்தை அழுத்தவும் என்று கூறியது" என்கிறார் பகுகுணா.
பின்னர் மீண்டும் ஒரு போன் கால் வந்துள்ளது. சீனாவுக்கு அனுப்பப்பட்ட சட்டவிரோதப் பொருட்கள் அடங்கிய பார்சல் சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் இந்த வழக்கில் பகுகுணாவின் பெயர் இடம்பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளனர். தனக்கு அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்தபோதும், மோசடி கும்பல் அவரது ஆதார் எண் மற்றும் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டு, அவரை டிஜிட்டல் கைது செய்துள்ளனர்.
டிஜிட்டல் அரெஸ்ட் என்றால் என்ன? மோசடி வலையில் சிக்காமல் இருப்பது எப்படி?
மோசடி செய்பவர்கள் பகுகுணா பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம் சாட்டினர். ஒரு வழக்கில் பகுகுணாவின் முக்கியக் குற்றவாளியாக இடம் பெற்றிருப்பதாகக் கூறிய மோசடி கும்பல் அவரைக் கைது செய்ய வாரண்ட் வைத்திருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் அவரை ஒரு வாட்ஸ்அப் வீடியோ காலில் வரவழைத்துள்ளனர். வீடியோ காலில் சீருடையில் இருக்கும் போலீஸ் அதிகாரியாக தோற்றம் அளித்த நபர், அவரது பீதியை மேலும் அதிகப்படுத்தியுள்ளார்.
17 நாள் டிஜிட்டல் அரஸ்டு, 5.5 கோடி அபேஸ்... இந்த மாதிரி மோசடியில் இருந்து தப்புவது எப்படி?
மோசடி செய்பவர்கள் பகுகுணாவை வெளி உலகத்திலிருந்து தனிமைப்படுத்தி, அனைத்து தகவல்தொடர்புகளையும் துண்டித்து, ஆஃப் செய்து வைக்க கட்டாயப்படுத்தியுள்ளனர். பகுகுணாவை தொடர்ந்து 40 மணிநேரம் வீடியோ காலில் வைத்து கதறவிட்ட மோசடி கும்பல், அவர் வேறு யாரையும் தொடர்புகொள்ள விடாமல் தடுத்துள்ளனர்.
தாங்கள் விருப்பப்படி பணப் பரிவர்த்தனை செய்ய வைக்க அவரை ஒரு வங்கிக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அந்த வங்கிக் கிளை மூடப்பட்டிருந்தால், மோசடி கும்பலின் முயற்சி பலிக்கவில்லை. அந்நிலையில், நண்பர் ஒருவர் தானாக பகுகுணாவை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போதுதான் பகுகுணா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
பெங்களூர் ஐடி ஊழியரிடம் ரூ.11.8 கோடி அபேஸ்.. போலீசுக்கு அதிர்ச்சி கொடுத்த சைபர் க்ரைம் வழக்கு!
ஒருவழியாக மோசடி கும்பலிடம் இருந்து விடுபட்ட பகுகுணா இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். தான் அனுபவித்த டிஜிட்டல் அரஸ்ட் கொடுமைகள் பற்றி பகிரங்கமாகப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்த இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மற்றவர்கள் இதுபோன்ற மோசடியில் சிக்குவதைத் தடுக்க தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
பீதி அடைவது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வருவதையும், எதிர்பாராத போன் கால் அல்லது மெசேஜ் வந்தால் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறியுள்ளார்.
சைபர் குற்றவாளிகள் இந்த வழிகளின் மூலம் உங்களை ஏமாற்றுவார்கள்! SBI எச்சரிக்கை!
அங்குஷ் பகுகுணாவுக்கு நடந்துள்ள இந்த சம்பவம் டிஜிட்டல் மோசடிகளில் பயன்படுத்தப்படும் அதிநவீன தந்திரங்களை எடுத்துக்காட்டுகிறது. இந்த டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஈடுபடும் கும்பல் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட நபர்களிடம் பயத்தை உருவாக்கி, அவர்களைப் பதற்றம் அடைய வைத்து தனிப்பட்ட தகவல்களையும் பணத்தையும் திருடுகிறார்கள்.
டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சி துரதிர்ஷ்டவசமாக மோசடி கும்பல்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை இதுபோன்ற வழக்குகள் உணர்த்துகின்றன. குறிப்பாக ஸ்கேன் கோடு உங்களிடம் கொடுத்து பணம் கொடுங்கள், கூரியர் கட்டணம் இவ்வளவு என்று கூறினால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதனாலும், உங்களது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான வாய்ப்பாக அமைந்து விடும்.
ஆபாச வீடியோவைக் காட்டி பெண் டாக்டரிடம் 59 லட்சம் அபேஸ் செய்த சைபர் கிரைம் கும்பல்!