ஷாவ்மீ நிறுவனம் 32 இன்ச் முதல் 85 இன்ச் வரையிலான திரையளவுகளில் 'Xiaomi TV A Pro e' என்ற புதிய 9 ஸ்மார்ட் டிவிகளை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை, விற்பனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
9 புதிய 4K ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியது ஷாவ்மீ
ஷாவ்மீ நிறுவனம், உலகளாவிய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட் டிவிகளான 'Xiaomi TV A Pro e' சிரீஸ் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது. 32 இன்ச் முதல் 85 இன்ச் வரை பல்வேறு திரை அளவுகளில் கிடைக்கும் இந்த டிவிகள், கூகுள் டிவி (Google TV) இயங்குதளத்துடன் வெளிவருகின்றன. மேலும், குறிப்பிட்ட சில மாடல்களில் 120Hz கேம் மோடு (Game Mode) வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து மாடல்களும் புளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் டூயல்-பேண்ட் வைஃபை (Dual-band Wi-Fi) ஆகியவற்றை ஆதரிக்கின்றன. இவற்றுடன் கூகுள் அசிஸ்டண்ட், ஆப்பிள் ஏர்ப்ளே (Apple AirPlay) மற்றும் கூகுள் காஸ்ட் (Google Cast) போன்ற சிறப்பம்சங்களும் உள்ளமைக்கப்பட்டுள்ளன. ஷாவ்மீ தனது உலகளாவிய இணையதளத்தில் மொத்தம் 9 புதிய மாடல்களைப் பட்டியலிட்டு உள்ளது. இதன்மூலம் டிவிகள் விரைவில் பல சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்பது உறுதியாகியுள்ளது. எனினும், இவற்றின் விலை மற்றும் விற்பனை தேதியை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
24
முக்கிய அம்சங்கள் & தொழில்நுட்ப விவரங்கள் என்ன?
TV A Pro e தொடரில் உள்ள அனைத்து மாடல்களும் QLED திரையைக் கொண்டுள்ளன. இவை 32, 43, 50, 55, 65, 75 மற்றும் 85 இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன. பெரும்பாலான மாடல்கள் 4K தெளிவுத்திறன் (Resolution), 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட பேனல்களுடன் வருகின்றன. இவற்றில் குவாட்-கோர் ARM கார்டெக்ஸ்-A55 செயலி மற்றும் மாலி-G52 2EE MC1 ஜிபியு (GPU) பொருத்தப்பட்டுள்ளன. 55, 65, 75 மற்றும் 85 இன்ச் திரை கொண்ட பெரிய மாடல்கள் மட்டும் HDMI வாயிலாக 'கேம் பூஸ்ட்' முறையில் தங்கள் ரெஃப்ரெஷ் ரேட்டை 120Hz வரை உயர்த்திக்கொள்ளும் வசதியைப் பெற்றுள்ளன. இந்த வசதி 32, 43 மற்றும் 50 இன்ச் மாடல்களில் இடம்பெறவில்லை.
34
முக்கிய அம்சங்கள் & தொழில்நுட்ப விவரங்கள் என்ன?
85 இன்ச் மாடலான 'Xiaomi TV A Pro 85 e' மட்டும் 15 W ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது; மற்ற அனைத்து மாடல்களிலும் 10 W ஸ்பீக்கர்களே வழங்கப்பட்டுள்ளன. ஷாவ்மீயின் டிவி ஸ்டிக் 4K மற்றும் டிவி பாக்ஸ் S போன்றே, இந்த டிவிகளுடன் வரும் ரிமோட்டிலும் வாய்ஸ் கன்ட்ரோல் வசதி மற்றும் நெட்ஃபிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) போன்ற செயலிகளுக்கான பிரத்யேக ஷார்ட்கட் பொத்தான்கள் உள்ளன. 'FHD' மாடல்கள் 1080p தெளிவுத்திறனைக் கொண்டுள்ளன. எனினும், இவை 94% DCI-P3 கலர் ஸ்பேஸ் ஆதரவை வழங்குகின்றன. அதேநேரம், 4K மாடல்களுடன் ஒப்பிடும்போது 'TV A Pro 43 FHD e' மற்றும் 'TV A Pro 50 FHD e' மாடல்களில் சற்று குறைந்த திறன் கொண்ட செயலியும் குறைவான போர்ட்களும் (Ports) இடம்பெற்றுள்ளன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.