200MP கேமரா.. 6,000mAh பேட்டரி, 90W சார்ஜிங்.. மாஸ் காட்டும் சியோமி 17 அல்ட்ரா - விலை எவ்வளவு?

Published : Mar 02, 2026, 05:04 PM IST

சியோமி தனது புதிய ஃபிளாக்ஷிப் தொடரான 'சியோமி 17' மற்றும் 'சியோமி 17 அல்ட்ரா' மாடல்களை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 செயலி, லைக்காவுடன் இணைந்த 200MP பெரிஸ்கோப் கேமரா அம்சங்களுடன் வந்துள்ளது.

PREV
15
200MP கேமரா போன்

உலக ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வகையில் சியோமி தனது புதிய ஃபிளாக்ஷிப் தொடரான ​​‘சியோமி 17’ மற்றும் ‘சியோமி 17 அல்ட்ரா’ மாடல்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை உலகளவில் வெளியிடப்பட்ட இந்த இரு மாடல்களும், பிரீமியம் பிரிவில் முன்னணி பிராண்டுகளுக்கு நேரடி சவால் விடுக்கும் வகையில் அம்சங்களுடன் வந்துள்ளன.

25
சியோமி 17

இரண்டு மாடல்களுக்கும் குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 செயலி சக்தி அளிக்கிறது. மேம்பட்ட செயல்திறன் மற்றும் சேமிப்பு திறனை ஒருங்கிணைக்கும் இந்த சிப்செட், ஹெவி கேமிங் மற்றும் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் பயனர்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளது. அதோடு, வைஃபை 7 மற்றும் புளூடூத் 5.4 போன்ற புதிய இணைப்பு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

35
சியோமி 17 அல்ட்ரா

புகைப்பட அனுபவத்தில் ‘சியோமி 17 அல்ட்ரா’ தனி கவனம் பெறுகிறது. லைக்காவுடன் இணைந்து டிரிபிள் கேமரா அமைப்பில் 50 மெகாபிக்சல் ஒரு இன்ச் சென்சார், 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தொலைதூர காட்சிகளையும் மிகத் தெளிவாக பதிவு செய்யும் திறன் இதன் முக்கிய பலமாகும்.

45
சியோமி அல்ட்ரா அம்சங்கள்

முன்புறத்தில் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளேவைக் குறித்து பார்க்கையில், அல்ட்ரா மாடல் 6.9 இன்ச் LTPO AMOLED திரையுடன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வழங்குகிறது. 6,000mAh பேட்டரி, 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

55
சியோமி 17 விலை

சியோமி 17 மாடல் 6.3 இன்ச் OLED திரை, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3,500 நிட்ஸ் பிரகாசத்துடன் வருகிறது. 50 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா அமைப்பு, 6,330mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் உள்ளது. விலை 999 யூரோவில் தொடங்குகிறது; அல்ட்ரா மாடல் 1,499 யூரோ விலையில் கிடைக்கிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories