பிஎஸ்என்எல் நிறுவனம் ஹோலி ஆபராக 14 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 28ஜிபி டேட்டாவை இலவசமாக கொடுக்கிறது. இந்த ஆபர் எந்த பிளானில் வருகிறது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் மத்திய அரசின் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டுக்கு (பிஎஸ்என்எல்) நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது. ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவை வழங்கி வந்தாலும், பிஎஸ்என்எல் குறைந்த விலையில் திட்டங்களை செயல்படுத்தி வருவதால் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், ஹோலி பண்டிகையையொட்டி பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக ஆபர் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
24
14 நாட்கள் வேலிட்டி இலவசம்
அதாவது பிஎஸ்என்எல் ரங்கோன் கா செலிப்ரேஷன், நான்-ஸ்டாப் கனெக்ஷன் (Rangon ka Celebration, Non-stop Connection) என்ற பெயரில் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் வேலிட்டி மற்றும் கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் வழக்கமான வேலிடிட்டி 150 நாட்கள் ஆகும். ஆனால் இந்த சலுகையின் மூலம் 14 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 164 நாள் வேலிடிட்டி கிடைக்கும்.
34
28ஜிபி டேட்டா இலவசம்
இந்த பிளானில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வருகிறது. இப்போது கூடுதலாக வேலிடிட்டி வழங்குவதால் இந்த 14 நாட்களுக்கும் தினமும் 2ஜிபி என மொத்தம் 28ஜிபி டேட்டா உங்களுக்கு கூடுதலாக கிடைக்கும். ஆனால் இந்த ஹோலி பண்டிகை ஆபர் மார்ச் மாதம் மட்டுமே செல்லுபடியாகும். மார்ச் 31ம் தேதி வரை இந்த பிளான் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.
ரூ.997 ப்ரீபெய்ட் பிளானில் வேலிடிட்டி, டேட்டா தவிர அன்லிமிடெட் கால்ஸ் வசதி உங்களுக்கு கிடைக்கும். மேலும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் பெறலாம். இந்த பிளானின் தினசரி செலவை எடுத்துக் கொண்டால் தினமும் 6 ரூபாய் மட்டுமே வருகிறது. இந்த பிளானில் மற்றொரு முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் 2GB டேட்டா தீர்ந்த பிறகும் இணைய சேவை துண்டிப்படாது. 40Kbps வேகத்தில் நீங்கள் இணையத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.