வாட்ஸ்அப் 10 சீக்ரெட்ஸ்.. பிரைவேசி முதல் ப்ளூ டிக் வரை.! உங்களுக்கு தெரியுமா?

First Published | Jul 10, 2023, 5:29 PM IST

வாட்ஸ்அப் அடிக்கடி அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் யாருக்கும் தெரியாத 10  வாட்ஸ்அப் பிரைவேசி அம்சங்களை பார்க்கலாம்.

வாட்ஸ்அப் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலி ஆகும்.பயனாளர்கள் அனுபவத்தை மேம்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டன் கணக்கில் புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது. இந்த செய்தியில் 10 ப்ரைவேசி (privacy features) அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

உங்கள் பெர்சனல் அரட்டைகளை (சாட்) லாக் செய்யும் ஆப்ஷனை தந்துள்ளது  வாட்ஸ்அப். யாருடைய அக்கவுண்ட்டை லாக் செய்ய விரும்புகிறீர்களோ, அவர்களது ப்ரொபைல் சென்று, கீழே இருக்கும் சாட் லாக் என்பதை தேர்ந்தெடுத்து இவ்வசதியினை பெறலாம்.

Tap to resize

மற்றவர்கள் அனுப்பும் மெசேஜ்களை Blue Ticks வராமல், படிக்க வசதி வந்துள்ளது. இதன் அடிப்படையில் அனுப்புநரின் செய்திகளை நீங்கள் படித்தீர்களா என்பதை அறிய முடியாது. இந்த அம்சம்  Settings > Privacy > Read receipts ஆகியவற்றின் மூலம் பயன்படுத்த முடியும்.

உங்கள் தொலைபேசி எண்ணை வைத்திருக்கும் எவரும் உங்களை வாட்ஸ்அப்பில் அழைக்கலாம். ஆனால் உங்கள் தனியுரிமை அமைப்புகளை மாற்றுவதன் மூலம் அறியப்பட்ட ஃபோன் எண்ணைத் தடுக்கலாம். தெரியாத அழைப்பாளர்களிடமிருந்து வரும் அழைப்புகளை தடுப்பது சுலபமான விஷயமாகும். தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகளை silence unknown callers ஆப்ஷனை பயன்படுத்தி Silence செய்ய முடியும்.

யாரேனும் தங்கள் ஸ்மார்ட்போனை எடுத்துக்கொண்டாலும், மற்றவர்கள் உங்கள் சாட்டை படிக்க முடியாதவாறு தடை செய்யலாம். பிங்கர் பிரின்ட் லாக் வசதியை ஆன் செய்து, இந்த வசதியை பெறலாம். ப்ரொஃபைல் பிக்சர், கன்டென்ட் லாஸ்ட் சீன் உள்ளிட்டவற்றையும் கூட குறிப்பிட்ட நபர்களுக்கு தெரியாமல் மறைத்து கொள்ள முடியும்.

சில நேரங்களில் தெரியாத நபர்களிடம் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ள நேரிடலாம். அப்போது உங்களது DP அறிமுகமில்லாத நபர்களுக்கு தெரியாது. தெரியாத குழுக்களில் உங்களைச் சேர்க்கும் எவரையும் நீங்கள் தடுக்கலாம். வாட்ஸ்அப் எப்போதும் உங்கள் ஃபோன் எண்ணை வைத்திருக்கும் எவரையும் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப அல்லது உங்களை குழுவில் சேர்க்க அனுமதிக்கிறது.

WhatsApp-ல் உள்ள பயனர்கள் தங்கள் ஆன்லைன் இருப்பதை மறைக்க முடியும். உங்கள் கணக்கிலிருந்து "ஆன்லைன்" குறிச்சொல்லை மறைக்கும். Disappearing Messages ஆப்ஷன் என்பது கூடுதல் தனியுரிமைக்காக இயக்கக்கூடிய அம்சமாகும். 

இந்த ஆப்ஷனை எனேபிள் செய்வதால் அவை அனுப்பப்பட்டதிலிருந்து 24 மணிநேரம், 7 நாட்கள் அல்லது 90 நாட்களுக்குப் பிறகு மறைந்துவிடும்படி நீங்கள் செட் செய்யலாம். வாட்ஸ்அப் பயனர்கள் 2-ஸ்டேப் சரிபார்ப்பு அம்சத்தைப் பயன்படுத்தலாம், ஏனெனில் இது அவர்களின் வாட்ஸ்அப் கணக்கிற்கு கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்கிறது.

ஆதார் - பான் கார்டு இணைக்கவில்லையா.? இனி இந்த 15 விஷயங்களை செய்ய முடியாது - முழு விபரம்

Latest Videos

click me!