பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த, வாட்ஸ்அப் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஒரு புதிய அப்டேட் அனைவருக்கும் வெளியிடுவதற்கு முன், அதனை பீட்டா சோதனையாளர்களுக்கு வழங்கி, அதன் செயல்பாடு குறித்து சோதிப்பது வழக்கம். தற்போது, வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை சோதித்து வருகிறது. இது, ஒரு குறிப்பிட்ட மெசேஜுக்கு வந்த பதில்களை தனித்தனியாகப் பார்க்காமல், அவற்றை ஒரே நூலிழையாக (thread) ஒழுங்கமைக்கும். இந்த அம்சம், குரூப் சாட்களில் நடக்கும் உரையாடல்களை எளிதாக்குகிறது. குறிப்பாக, பல மெசேஜ்கள் உள்ள பெரிய குரூப்களில், தேவையில்லாமல் ஸ்க்ரோல் செய்யாமல், ஒரு குறிப்பிட்ட மெசேஜுக்கான பதில்களை மட்டும் எளிதாகக் கண்டறிய இது உதவுகிறது.