இந்த விற்பனையில் OnePlus, iQOO, Samsung, Apple போன்ற முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரை தள்ளுபடி கிடைக்கும் என அமேசான் உறுதி செய்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு வெளியான OnePlus Nord CE 4 ஸ்மார்ட்போன், தற்போது ரூ. 18,499 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இந்த ஃபோன் 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 50MP கேமரா, 5500mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டது. அதேபோல, iQOO Z10 Lite 5G ஸ்மார்ட்போன் வெறும் ரூ. 10,998 என்ற விலையில் கிடைப்பது, பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு.