பெற்றோர்களுக்கு நோ டென்ஷன்.. குழந்தைகளின் பாதுகாப்புக்காக வாட்ஸ்அப் வெளியிட்ட புதிய வசதி

Published : Mar 12, 2026, 01:53 PM IST

13 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பாதுகாப்பாக வாட்ஸ்அப் பயன்படுத்தும் வகையில் “Parent-Managed Accounts” என்ற புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
14
வாட்ஸ்அப்பில் புதிய பாதுகாப்பு அம்சம்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் இன்ஸ்டான்ட் மெசேஜிங் ஆப் ஆன வாட்ஸ்அப்பில், குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை அதிகரிக்க ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தியுள்ளது. 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காக “பெற்றோர்-நிர்வகிக்கப்பட்ட கணக்குகள்” என்ற சிறப்பு கணக்கு முறையை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதி பெற்றோர் கண்காணிப்புடன் குழந்தைகள் பாதுகாப்பாக வாட்ஸ்அப் பயன்படுத்த உதவும் வகையில் உள்ளது. இந்த புதிய அம்சம் வரும் மாதங்களில் படிப்படியாக பயனர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

24
குழந்தைகளின் பாதுகாப்பு

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் வெளியிட்ட தகவலின்படி, குடும்பங்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் ஆலோசனைகள் இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறிய வயதிலேயே மெசேஜிங் தளங்களை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம். இந்த கணக்குகளில், குழந்தையின் வாட்ஸ்அப் கணக்கை பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ உருவாக்க வேண்டும். அதோடு அந்த கணக்கு பெற்றோரின் வாட்ஸ்அப் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் குழந்தைகள் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள், எந்த செயல்பாடுகளை செய்கிறார்கள் என்பதை பெற்றோர் எளிதாக கண்காணிக்க முடியும்.

34
பெற்றோர் மேனேஜ்டு அக்கவுன்ட்

பேரண்ட் மேனேஜ்டு அக்கவுன்ட்களில் சில கட்டுப்பாடுகளும் இருக்கும். குழந்தைகள் தனிப்பட்ட மெசேஜ்கள் மற்றும் வாய்ஸ் கால்கள் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். மேலும் அவர்கள் எந்த குருப்களில் சேர வேண்டும் என்பதை பெற்றோர்கள் தீர்மானிக்கலாம். அதே நேரத்தில், ஸ்டேட்டஸ் அப்டேட், சேனல்கள், மெட்டா ஏஐ போன்ற அம்சங்கள் இந்த கணக்குகளில் கிடைக்காது. அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் மெசேஜ்கள் நேரடியாக ‘Message Request’ ஃபோல்டருக்கு செல்லும். அந்த ஃபோல்டரை திறக்க பெற்றோரின் PIN தேவை.

44
பெற்றோர் மேற்பார்வை

மேலும், குழந்தை புதிய கான்டாக்ட்டை சேர்த்தாலோ அல்லது ஒருவரை பிளாக் செய்தாலோ பெற்றோருக்கு உடனடியாக அறிவிப்பு வரும். இதனால் குழந்தைகளின் ஆன்லைன் நடவடிக்கைகள் குறித்து பெற்றோருக்கு தெளிவான தகவல் கிடைக்கும். இருப்பினும் பாதுகாப்பு அம்சத்தில் எந்த மாற்றமும் இல்லை. மற்ற கணக்குகளைப் போலவே இந்தக் கணக்குகளுக்கும் End-to-End Encryption பாதுகாப்பு வழங்கப்படும். இதனால் குழந்தைகளின் உரையாடல்கள் தனிப்பட்ட முறையில் பாதுகாக்கப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories