வாட்ஸ்அப் குரூப்பில் இனி இந்த 4 மாற்றங்கள்: புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம்!

Published : Oct 31, 2026, 04:07 PM IST

வாட்ஸ்அப் நிறுவனம் தனது குரூப் சாட் (Group Chat) பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் வகையில் 4 புதிய முக்கிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் உரையாடல்களைத் தடைபடாமல் தொடர இந்த புதிய அப்டேட்டுகள் பெரிதும் உதவுகின்றன.

PREV
15
வாட்ஸ்அப் புதிய அப்டேட்

பிரபல மெசேஜ் ஆப்பான வாட்ஸ்அப், அண்மையில் கணக்கு இல்லாதவர்களையும் அழைப்பில் சேர்க்க உதவும் 'கெஸ்ட் கால்ஸ்' (Guest Calls) வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து, தற்போது வாட்ஸ்அப் குரூப் சாட்களுக்காக (Group Chats) 4 புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

குழுவில் புதிதாக இணையும் உறுப்பினர்கள் உரையாடல்களைப் புரிந்துகொள்வதற்கும், ஏற்கனவே இருக்கும் பயனர்கள் விட்ட இடத்திலிருந்து உரையாடலைத் தொடர்வதற்கும் இந்த புதிய வசதிகள் பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25
வாட்ஸ்அப்பின் 4 புதிய அம்சங்கள்

நிரந்தரமாக மெசேஜ்களை பின் (Pin) செய்யும் வசதி:

முன்பு வாட்ஸ்அப் குழுக்களில் முக்கிய மெசேஜ்களை 24 மணிநேரம், 7 நாட்கள் அல்லது 30 நாட்கள் வரை மட்டுமே பின் செய்து வைக்க முடிந்தது. ஆனால் புதிய அப்டேட் மூலம், பயனர்கள் முக்கிய மெசேஜ்களை "எப்போதும் இருக்கும் வகையில்" (Permanently / Forever) நிரந்தரமாக பின் செய்து வைத்துக்கொள்ள முடியும்.

35
புதிய உறுப்பினர்களுக்கு பழைய மெசேஜ்களை அனுப்பும் வசதி

குழுவில் புதிதாக இணையும் நபர்களுக்குச் சமீபத்திய உரையாடல்களின் வரலாற்றை (Message History) அனுப்பும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. குழுவின் அட்மின்கள், புதிதாக இணைந்த உறுப்பினரின் பெயரைக் கிளிக் செய்து சமீபத்திய மெசேஜ்களைப் பகிரலாம். இந்த மெசேஜ்களும் முழுமையாக எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் (End-to-End Encrypted) செய்யப்பட்ட பாதுகாப்பானவையாகவே இருக்கும். முன்பு உறுப்பினர்களைச் சேர்க்கும் போது மட்டுமே வரலாற்றைப் பகிர முடிந்தது, தற்போது சேர்த்த பிறகும் பகிர முடியும்.

45
மென்ஷன்களை (Mentions) ஃபில்டர் செய்யும் வசதி

குழு உரையாடல்களில் உங்களைக் குறிப்பிட்டு (Tag/Mention) அனுப்பப்பட்ட மெசேஜ்களை மட்டும் தனியாக ஃபில்டர் செய்து பார்க்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஃபில்டரைப் பயன்படுத்தும்போது, நீங்கள் டேக் செய்யப்பட்ட மெசேஜ்கள் மட்டும் தனியாகத் தெரியும்.

55
குரூப் ஸ்டேட்டஸ் (Group Status) வசதி

பயனர்கள் இனி ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு மட்டும் தெரியும் வகையில் 'குரூப் ஸ்டேட்டஸ்' வைத்துக்கொள்ள முடியும். சாதாரண ஸ்டேட்டஸ் பக்கத்தில் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்வது போலவே இதுவும் செயல்படும். இந்த ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்திற்குப் பிறகு தானாக மறைந்துவிடும். குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் இதற்கு ரியாக்ட் செய்யவும், தங்களின் ஸ்டேட்டஸ்களைச் சேர்க்கவும் முடியும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories