WhatsApp : இந்தியாவில் ஒரே மாதத்தில் 74 லட்சம் கணக்குகளை தடை செய்த வாட்ஸ்அப் - என்ன காரணம் தெரியுமா?

First Published | Jun 2, 2023, 4:58 PM IST

இந்தியாவில் கடந்த ஏப்ரலில் 74 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021க்கு இணங்க, மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் 74 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 30 க்கு இடையில், 7,452,500 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டன. மேலும் 2,469,700 கணக்குகள் முன்கூட்டியே தடை செய்யப்பட்டன.

பயனர்களிடமிருந்து எந்த அறிக்கையும் வருவதற்கு முன்பே வாட்ஸ்அப் அதன் மாதாந்திர அறிக்கையில் இத்தகவலை வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 500 மில்லியன் பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான சோசியல் மீடியா தளமான வாட்ஸ்அப்பில் ஏப்ரல் மாதத்தில் 4,377 புகார் அறிக்கைகளைப் பெற்றது, மேலும் அதன் மேல் நடவடிக்கை செய்யப்பட்ட பதிவுகள் 234 ஆகும்.

Latest Videos


மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இதுபற்றி கூறும்போது, “இந்த பயனர் - பாதுகாப்பு அறிக்கையில் பெறப்பட்ட பயனர் புகார்களின் விவரங்கள் மற்றும் வாட்ஸ்அப் எடுத்த நடவடிக்கை, அத்துடன் எங்கள் தளத்தில் துஷ்பிரயோகத்தை எதிர்த்து வாட்ஸ்அப்பின் சொந்த தடுப்பு நடவடிக்கைகள் உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட குழு, பிக் டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த நாட்டின் டிஜிட்டல் சட்டங்களை வலுப்படுத்தும் நடவடிக்கையாகும்.

சமூக ஊடக தளங்களின் முடிவுகளுக்கு எதிராக பயனர்களின் மேல்முறையீடுகளைக் கவனிக்கும்.  திறந்த, பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை நோக்கிய ஒரு முக்கிய உந்துதலில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், 'டிஜிட்டல் நாக்ரிக்'களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..புது ஸ்டைலில்.. மாஸாக களமிறங்கும் ஓப்போ ரெனோ 10 சீரிஸ் - விலை எவ்வளவு தெரியுமா?

click me!