புது ஸ்டைலில்.. மாஸாக களமிறங்கும் ஓப்போ ரெனோ 10 சீரிஸ் - விலை எவ்வளவு தெரியுமா?

First Published | May 30, 2023, 10:32 AM IST

ஓப்போ ரெனோ 10 சீரிஸ் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அதனை பற்றிய பல்வேறு சிறப்பம்சங்கள் வெளியாகி இருக்கிறது. அவற்றை இங்கு பார்க்கலாம்.

ஓப்போ ரெனோ 10 (OPPO Reno 10) சீரிஸ் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. Reno 9 சீரிஸ்-ன் தொடர்ச்சியாக OPPO சமீபத்தில் Reno 10 சீரிஸை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த வரிசையில் மொத்தம் மூன்று மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவை, Reno 10, Reno 10 Pro மற்றும் Reno 10 Pro+ ஆகியவை ஆகும். மேற்கூறப்பட்ட இந்த மூன்று மாடல்களும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தற்போது தகவல்கள் கசிந்துள்ளது.

Reno 10 Pro மற்றும் Reno 10 Pro+ 5G இந்தியாவில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி விலை இந்தியாவில் ரூ.35,000 முதல் ரூ.39,000 வரை இருக்கும். டாப்-எண்ட் ரெனோ 10 ப்ரோ+ 5ஜியின் விலை ரூ.41,000 முதல் ரூ.43,000 வரை இருக்கும். OPPO Reno 10 சீரிஸ் ஆனது 6.74-இன்ச் OLED டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 1400 nits வரை வெளிச்சம் என பல பக்காவான அம்சங்களை கொண்டுள்ளது.

Tap to resize

Reno 10 ஆனது Snapdragon 778G SoCm பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. Ren 10 Pro ஆனது MediaTek Dimensity 8200 SoC உடன் வருகிறது. அதே சமயம் Reno 10 Pro+ ஆனது Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC உடன் வருகிறது. Reno 10 ஆனது f/1.7 துளையுடன் கூடிய 64MP முதன்மை ஓம்னிவிஷன் OV64B சென்சார், 8MP IMX355 அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 32MP IMX709 2X டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Reno 10 ஆனது Snapdragon 778G SoCm பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. Ren 10 Pro ஆனது MediaTek Dimensity 8200 SoC உடன் வருகிறது. அதே சமயம் Reno 10 Pro+ ஆனது Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC உடன் வருகிறது. Reno 10 ஆனது f/1.7 துளையுடன் கூடிய 64MP முதன்மை ஓம்னிவிஷன் OV64B சென்சார், 8MP IMX355 அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 32MP IMX709 2X டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Reno 10 Pro OIS உடன் 50MP Sony IMX890 பிரதான கேமரா மற்றும் f/1.8 துளை, 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 32MP டெலிஃபோட்டோ லென்ஸுடன் வருகிறது. Reno10 Pro+ ஆனது OIS உடன் 50MP Sony IMX890 சென்சார், 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் கொண்ட 64MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ OV64B சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது.

செல்ஃபிகள் மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு முன்புறத்தில் 32MP ஷூட்டர் உள்ளது. OPPO Reno 10 Pro+ ஆனது 100W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 4700mAh பேட்டரியையும், Reno 10 Pro மற்றும் Reno 10 ஷிப் 4600mAh செல் மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் கொண்டுள்ளது. ரெனோ 10 சீரிஸ் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் வருகிறது. இது ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியில் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க..44 நிமிடத்தில் சார்ஜ்.! 5 வருடத்துக்கு அப்டேட்.! ஐபோனுக்கே டஃப் கொடுக்கும் Oppo F23 5G எப்படி இருக்கு?

Latest Videos

click me!