எல்லாரும் ஒதுங்குங்க.. அசரவைக்கும் கேமிங் லேப்டாப்பை அறிமுகம் செய்த Acer - Aspire 5 எப்படி இருக்கு?

First Published | May 30, 2023, 2:27 PM IST

ஏசர் புதிய கேமிங் லேப்டாப் ஆன 'ஆஸ்பயர் 5' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சங்களை இங்கு பார்க்கலாம்.

தைவானை சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஏசர், இந்தியாவில் சமீபத்திய 13வது ஜெனரல் இன்டெல் கோர் செயலி மூலம் இயக்கப்படும் புதிய 'ஆஸ்பையர் 5' கேமிங் லேப்டாப்பை கடந்த திங்கள் கிழமை அறிமுகப்படுத்தியது.

ரூ.70,990 விலையில், ஆஸ்பியர் 5 கேமிங் லேப்டாப் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்க கிடைக்கிறது. ஆஸ்பியர் 5 கேமிங் லேப்டாப் 14-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஐபிஎஸ் தொழில்நுட்பத்துடன் வருகிறது. 1920 x 1200 தெளிவுத்திறனைக் கொண்டுள்ளது. இது 16:10 விகிதத்துடன் 170 டிகிரி வரை கோணத்தை கொண்டுள்ளது.

Tap to resize

மேலும், ஆஸ்பியர் 5 கேமிங் லேப்டாப் என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 2050 உடன் வருகிறது. இதுமட்டுமில்லாமல், கேமர்களுக்கு அதிநவீன AI அம்சங்கள் மற்றும் ரே டிரேசிங் திறன்களை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பில் சமீபத்திய Wi-Fi 6E மற்றும் புளூடூத் 5.2 தொழில்நுட்பங்கள் உள்ளன.

இது வேகமானதை உறுதி செய்கிறது. நம்பகமான வயர்லெஸ் இணைப்பாகவும் செயல்படுகிறது. USB டைப்-சி போர்ட் மற்றும் தண்டர்போல்ட் 4 உடன், பெரிய கோப்புகளை மாற்றுவது மற்றும் இதன் எடை வெறும் 1.57 கிலோ ஆகும்.

கூடுதலாக, லேப்டாப் இரண்டு செயல்திறன்-கோர்கள் (பி-கோர்கள்) மற்றும் எட்டு திறமையான கோர்கள் (ஈ-கோர்கள்) கொண்ட மேம்பட்ட செயல்திறன் ஹைப்ரிட் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது இன்டெல் த்ரெட் டைரக்டரால் நிர்வகிக்கப்படுகிறது.

இதையும் படிங்க..புது ஸ்டைலில்.. மாஸாக களமிறங்கும் ஓப்போ ரெனோ 10 சீரிஸ் - விலை எவ்வளவு தெரியுமா?

Latest Videos

click me!