200MP கேமரா, 8000mAh பேட்டரி: 90W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் களமிறங்கும் விவோ போன்!

Published : Oct 28, 2026, 05:20 PM IST

கேமரா பிரியர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் விவோ எக்ஸ்500 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகமானதைத் தொடர்ந்து, உலகளாவிய சந்தையில் அக்.28-ஆம் தேதியும், இந்தியாவில் நவம்பர் மாத இறுதியில் வெளியாகவுள்ளன.

PREV
14
விவோ புதிய மொபைல் அறிமுகம்

விவோ பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் 'வெயிட்டிங் மோடில்' போட்டு வைக்கும்படி விவோ எக்ஸ்500 சீரிஸ் (Vivo X500 Series) மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இப்போது, இதன் இந்திய வெளியீடு மற்றும் விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் மாடலின் கேமரா அம்சங்கள் கசிந்துள்ளன. இந்த விவோ எக்ஸ்500 சீரிஸ் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

சீன மார்க்கெட்டில் விவோ எக்ஸ்500 (Vivo X500), விவோ எக்ஸ்500 ப்ரோ (Vivo X500 Pro) மற்றும் விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் (Vivo X500 Pro Max) ஆகிய மாடல்கள் வெளியாகிவிட்டன. இப்போது, குளோபல் மற்றும் இந்திய வெளியீட்டுக்கு ரெடியாகி வருகின்றன. இந்தியாவில் வருகிற நவம்பர் மாத இறுதியில் வெளியாகும் என்று மார்க்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு ஏற்ப விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் கசிந்துள்ளன. இதில் 60FPS ஆட்டோபோகஸ் டிராக்கிங் ஸ்னாப்ஷாட் கிடைக்க இருக்கிறது. 4K சினிமாடிக் ஸ்லோவ் மோஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 960FPS வரையில் இப்படி வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். இந்த அம்சங்கள் மட்டுமே கசிந்துள்ளன.

24
முக்கியச் சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே - 6.85 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு HDR10+, டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பிராஸசர் & கிராபிக்ஸ் - ஆக்டா கோர் டைமன்சிட்டி 9600 ப்ரோ 2என்எம் (Octa Core Dimensity 9600 Pro 2nm) சிப்செட் கிடைக்க இருக்கிறது. இதனுடன் மாலி ஜி2 அல்ட்ரா என்எக்ஸ் ஜிபியு (Mali G2 Ultra NX GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

ஓஎஸ்(OS) - லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) மற்றும் ஓர்ஜின் ஓஎஸ் 7 (Origin OS 7) கொடுக்கப்பட்டுள்ளது.

34
கேமரா & பேட்டரி

மெயின் கேமரா - 50 எம்பி ஜீஸ் அல்ட்ரா டைனாமிக் கேமரா

டெலிபோட்டோ கேமரா - 200 எம்பி ஜீஸ் ஏபிஓ சூப்பர் டெலிபோட்டோ கேமரா

அல்ட்ரா வைடு கேமரா - 50 எம்பி ஜீஸ் அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா

வீடியோ & ஸ்டெபிலைசேஷன் - ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் வசதி உள்ளது.

செஃபி கேமரா - 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு & சென்சார்கள் - இன்பிராரெட் சென்சார் மற்றும் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பு உள்ளது.

ஆடியோ - ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-ஃபை ஆடியோ (Hi-Fi Audio) வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி & சார்ஜிங் - 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய பிரம்மாண்டமான 8000mAh பேட்டரி கிடைக்கிறது.

44
விலை விவரம்

சீனாவில் இந்த போன் சுமார் ரூ.1,00,000 பட்ஜெட்டில் வெளியானது. எனவே, இந்தியாவிலும் இதன் விலை ரூ.1 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories