Vivo ஸ்மார்ட்போன்ளுக்கு அட்டகாசமான ஆஃபர்கள் அறிவிப்பு!

First Published | Sep 21, 2022, 2:59 PM IST

Flipkart பிக் பில்லியன் டே சேலில் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கான ஆஃபர்கள் கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டுவிட்டன. அந்த வரிசையில் விவோ தரப்பிலும் சில ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்கள் அறிவித்துள்ளனர்.

அதன்படி, விவோவின் T சீரிஸில் பிரபலமான Vivo T1x ஸ்மார்ட்போனுக்கு சுமார் 7 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. விவோ T1x ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் போது 16,990 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலை 9,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 
 

இதே போல் 19,990 ரூபாய் மதிப்பிலான விவோ T1 44W ஸ்மார்ட்போன், 12,499 ரூபாய்க்கு ஆஃபரில் விற்கப்படுகிறது. ஐசிஐசிஐ அல்லது ஆக்ஸிஸ் வங்கி தரப்பிலான ஆஃபர்களை முழுமையாகப் பயன்படுத்தி மிகக்குறைந்த விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். 
 

Tap to resize

T1 வரிசையில் Vivo T1 Pro 5G ஸ்மார்ட்போன் 17,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் அமோலெட் டிஸ்ப்ளே, 66W ஃபாஸ்ட் சார்ஜிங், 4700 mAh பேட்டரி ஆகியவை இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. விவோ வரிசையில் சிறந்த ஸ்மார்ட்போனாக Vivo T1 Pro 5G இருப்பதாக டெக் வல்லுனர்கள் கூறுகின்றனர். 
 

விவோ ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று விரும்பும் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட்டின் இந்த பிக் பில்லியன் டே சேல் விற்பனையில் அதிகபட்ச ஆஃபர்களைப் பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம். 
 

Latest Videos

click me!