iPhone காலவரிசையில் நீண்ட வருடங்களாக இருந்த குறை சரிசெய்யப்பட்டது!

First Published Sep 21, 2022, 9:15 AM IST

ஐபோன் 6க்கு பிறகு வந்த எந்த ஐபோனையும் பேக் பேனலை தனியாக கழற்றி ரிப்பேர் செய்ய முடியாதபடி இருந்த நிலையில், தற்போது அந்த குறைபாடு ஐபோன் 14 இல் நிவர்த்தி செய்யப்பட்டது.
 

ஐபோன் 14 ஸ்மார்ட்போனின் ரீடிசைன் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பேக் கிளாஸ் உடைந்துவிட்டால் மொத்தமாக மாற்ற வேண்டியதில்லை. பேக் பேனல் மட்டும் தனியாக கழற்றி ரிப்பேர் செய்துகொள்ளலாம். கிட்டத்தட்ட ஐபோன் 6க்கு பிறகு வந்த எல்லா ஐபோன்களிலும் பின்பக்கத்தை கழற்ற முடியாத வகையில், செறிவுமிக்க பசை போட்டு ஓட்டப்பட்டிருந்தது. 
 

ஆனால், தற்போது வெளிவந்திருக்கும் ஐபோன் 14 இல், குறைவான அளவில் பசையிட்டு, இரண்டு திருகுகளை வைத்து பொருத்தப்பட்டுள்ளது. திருகு கழற்றினால் போனின் முன்பக்கத்தையும், பின்பக்கத்தையும் தனியாக கழற்றிக் கொள்ளாம். சாண்ட்விச் போல் நடுப்பகுதி மட்டும் தனியாக இருக்கும். 
 

எனவே, ஃபோன் கீழே விழுந்தால் கூட திருகுகளை கழற்றி, பின்பக்க பேனலை தனியாக கழற்றிவிட்டு ரிப்பேர் செய்துகொள்ளலாம். அதேபோல், இதற்கு முன்பு முன்பக்கத்தில் பிரச்சனை ஏற்பட்டால், சிப் போர்டு மாற்ற வேண்டியதாக இருந்தது. தற்போது முன்பக்க பேனலை மட்டும் தனியாக கழற்றி கொள்ளலாம்.இந்த டிசைனானது ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸில் மட்டும் தான் கொடுக்கப்பட்டுள்ளது, ஐபோன் ப்ரோ, ப்ரோ மேக்ஸில் இந்த மாடல் இல்லை.
 

கட்டணத்தைப் பொறுத்தவரையில் பின்பக்கத்தில் உள்ள பேனலை மாற்ற வேண்டுமென்றால், கிட்டத்தட்ட 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம். பேக் பேனலை மாற்றுவதற்கு 15 ஆயிரம் ரூபாய் என்பது கட்டணம் என்பது கொஞ்சம் ஓவர் தான். 
 

click me!