வாட்ஸ்அப் செயலியில் அடுத்தடுத்து கொண்டு வரப்படும் சிறப்பம்சங்களானது, வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் சோதிக்கப்பட்ட பிறகு தான் வரும். அவ்வாறு வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் சோதிக்கப்பட்டு புதிய அப்டேட் குறித்து WhatsApp Beta Info பக்கத்தில் செய்திகள் வந்துள்ளது.
அதன்படி, வாட்ஸ்அப்பில் பயனர்கள் ஒரு மெசேஜை அனுப்பிய பிறகு, அந்த மெசேஜை எடிட் செய்யும் வகையிலான அம்சம் வருகிறது. மேலும், அந்த குறிப்பிட்ட மெசேஜ் எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை எதிர்முனையில் இருப்பவருக்கு தெரியப்படுத்தும் வகையில் ‘Edited’ என்று குறிக்கப்பட்டிருக்கும்
இந்த எடிட் அம்சத்தை ஏற்கெனவே கடந்த சில மாதங்களாக சோதிக்கப்பட்டு வருகிறது என்றும், தற்போது முழுமை பெறும் வடிவத்திற்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பயனர்கள் அனுப்பப்படும் மெசேஜ்களை திருத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட கால வரம்பு இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வாட்ஸ்அப் எந்தெந்த சாதனத்தில் எல்லாம் இணைக்கப்பட்டுள்ளதா, அவை அனைத்திலும் மெசேஜ்களை எடிட் செய்ய முடியும்.
இந்த அம்சம் பொது பயனர்களின் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்பது குறித்த விவரங்களும் வரவில்லை. வாட்ஸ்அப் புதிய அம்சங்கள் வந்தாலும், உடனே அப்டேட் செய்யாமல், ஓரிரு நாட்களுக்கு பிறகு அப்டேட் செய்தால், அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் கூட தவிர்க்க முடியும்.