Flipkart கட்டண உயர்வு… கேஷ் ஆன் டெலவரி கொடுத்தாலும் சிக்கல், வாங்கிய பொருளை ரிட்டர்ன் செய்தாலும் சிக்கல்!

First Published Sep 20, 2022, 12:18 PM IST

Flipkart இல் அடுத்தடுத்து புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட முறையால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Flipkart

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  ஃபிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டே சேல் என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஏராளமான பொருட்களுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டு, நல்ல ஆஃபர் நிலையில் விற்கப்படுகிறது. 

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் சத்தமே இல்லாமல் சில புதிய கட்டண மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, இதுவரையில் நாம் வாங்கிய பொருளை இலவசமாக ரிட்டர்ன் செய்து வந்த நிலையில், இனி பொருளை ரிட்டர்ன் செய்வதற்கும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. 
 

மேலும், இனி கேஷ் ஆன் டெலிவரி என்ற ஆப்ஷனை பயன்படுத்தி பொருட்களை வாங்கும் போது, முன்பணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. முன்தொகையை செலுத்தினால் மட்டுமே ஆர்டர் நிறைவு செய்யப்படும். அவ்வாறு வாடிக்கையாளர்கள் 150 ரூபாய் முன்தொகையை பிறகு, கேஷ் ஆன் டெலிவரியின் போது, பொருளுக்கான மீதி தொகையை செலுத்த வேண்டும். 
 

உதாரணத்திற்கு ஒரு பொருளின் விலை 1000 ரூபாய் என்றால், கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கும் போது 150 ரூபாய் முன்தொகை செலுத்த வேண்டும். பொருள் டெலிவரி செய்யப்படும் போது 850 ரூபாய் செலுத்த வேண்டும். 
 

இவ்வளவு காலமாக இலவசமாக பொருளை ரிட்டர்ன் செய்யும் பழக்கத்திலும், இலவசமாக கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனை தேர்வுசெய்யவும் பழகி வந்துள்ளோம். ஆனால், திடீரென எல்லாவற்றுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை வரும் போது, வாடிக்கையாளர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

click me!