Spotify Premium Free: 3 மாதங்களுக்கு Spotify Premium இலவசம்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Published : Jun 28, 2026, 08:13 PM IST

Spotify Premium Free: விளம்பரமில்லா இசை, ஆஃப்லைன் டவுன்லோடு, உயர்தர ஆடியோ உள்ளிட்ட பல அம்சங்களை குறிப்பிட்ட இந்த பயனர்கள் கூடுதல் கட்டணமின்றி அனுபவிக்கலாம். இதுகுறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

PREV
13
Spotify Premium Free

இசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை Vodafone Idea (Vi) அறிவித்துள்ளது. பிரபல இசை ஸ்ட்ரீமிங் சேவையான Spotify-உடன் கூட்டணி அமைத்துள்ள Vi, தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ்ட்பெய்ட் திட்டங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 3 மாதங்கள் Spotify Premium சேவையை இலவசமாக வழங்குகிறது. இதன் மூலம் கூடுதல் கட்டணம் இல்லாமல் பிரீமியம் இசை அனுபவத்தைப் பெறலாம். இந்த சலுகையின் கீழ், விளம்பரமில்லாமல் பாடல்களைக் கேட்கலாம். மேலும், பாடல்களை ஆஃப்லைனில் பதிவிறக்கம் செய்து இணையம் இல்லாமலும் கேட்கும் வசதி, உயர்தர ஆடியோ தரம் மற்றும் விருப்பமான பாடல்களை நேரடியாக தேர்வு செய்து இசைக்கும் அம்சங்களும் கிடைக்கும்.

23
Vi Spotify Offer

புதிய வாடிக்கையாளர்களுடன், தகுதியான போஸ்ட்பெய்ட் திட்டங்களில் உள்ள தற்போதைய Vi பயனர்களும் இந்த சலுகையைப் பெறலாம். ஆனால், இதற்கு முன்பு Spotify Premium சேவையைப் பயன்படுத்தாதவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். இந்த இலவச Spotify Premium-ஐ பெற, பயனர்கள் Vi செயலி மூலம் சேவையை ஆக்டிவேட் செய்ய வேண்டும். ரூ.451, ரூ.551, ரூ.751 மற்றும் REDX ரூ.1,201 தனிநபர் போஸ்ட்பெய்ட் திட்டங்களிலும், ரூ.701, ரூ.751, ரூ.871, ரூ.1,201, ரூ.1,301, ரூ.1,401, ரூ.1,526 மற்றும் REDX குடும்பத்தில் ரூ.1,601 திட்ட சலுகை வழங்கப்படுகிறது. குடும்ப திட்டங்களில், முதன்மை கணக்கு வைத்திருப்பவருக்கு மட்டுமே இந்த Premium வசதி கிடைக்கும்.

33
Vi Postpaid Plans

3 மாத இலவச காலம் முடிந்த பிறகு, Vi-யின் 'பில்லில் சேர்' வசதியின் மூலம் மாதம் ரூ.139 செலுத்தி Spotify Premium சேவையைத் தொடரலாம். இந்த சேவையின் மூலம் 100 மில்லியனுக்கும் அதிகமான பாடல்களை விளம்பரமின்றி கேட்கும் வசதி, ஆஃப்லைன் டவுன்லோடு மற்றும் சிறந்த ஒலி தரம் போன்ற பல பிரீமியம் அம்சங்களையும் தொடர்ந்து பயன்படுத்த முடியும். தொலைத்தொடர்பு சேவையுடன் பொழுதுபோக்கையும் இணைக்கும் முயற்சியாக இந்த கூட்டணியை அறிமுகப்படுத்தியுள்ளது. Spotify Premium-ஐ பயன்படுத்த நினைத்திருந்த Vi போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இது கூடுதல் மதிப்பை வழங்கும் சலுகையாக இருக்கும். இருப்பினும், உங்கள் போஸ்ட்பெய்ட் திட்டம் இந்த ஆஃபருக்கு தகுதியானதா என்பதை Vi செயலியில் முன்கூட்டியே சரிபார்த்த பிறகே இந்த சலுகையைப் பயன்படுத்துவது நல்லது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories