Flipkart GOAT Sale: ஐபோன் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ.22,000 தள்ளுபடி! மிஸ் பண்ணாதீங்க!

Published : Jun 28, 2026, 05:45 PM IST

Flipkart GOAT Sale: ஃபிளிப்கார்ட்டில் ஐபோன் 17 மாடல்களுக்கு ரூ.22,000 வரை அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு விற்பனை தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
ஐபோன் 17-க்கு ரூ.12,000 வரை தள்ளுபடி

பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான ஃபிளிப்கார்ட், 'GOAT Sale' என்ற பெயரில் ஜூலை 4-ஆம் தேதி முதல் சிறப்பு விற்பனையைத் தொடங்குகிறது. இந்த விற்பனையின்போது ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. ஐபோன் 17-ன் ஆரம்ப விலை ரூ.82,900. ஆனால், ஃபிளிப்கார்ட் GOAT சேலில் இதை ரூ.70,990-க்கு வாங்க முடியும். இதன் மூலம், நேரடியாக கிட்டத்தட்ட ரூ.12,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. புதிய ஐபோன் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

24
ஐபோன் 17 ப்ரோ, ப்ரோ மேக்ஸ் மீது தள்ளுபடி

ப்ரீமியம் போன் தேடுபவர்களுக்கும் இந்த சேலில் நல்ல டீல்கள் உள்ளன. ஐபோன் 17 ப்ரோவின் அசல் விலை ரூ.1,34,900. ஆனால், ஆஃபரில் ரூ.1,12,900-க்கு கிடைக்கிறது. அதாவது, ரூ.22,000 வரை தள்ளுபடி. அதேபோல, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கும் ரூ.22,000 வரை விலை குறைப்பு அறிவித்துள்ளனர். இந்த போனை ரூ.1,27,900-க்கு வாங்கலாம்.

34
ஐபோன் 17 சிறப்பம்சங்கள்

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17-ல் புதிய தலைமுறை பிராசஸரை பொருத்தி செயல்திறனை மேம்படுத்தியுள்ளது. சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, மென்மையான விஷுவல்களுக்கு அதிக ரெஃப்ரெஷ் ரேட், சக்திவாய்ந்த A19 சிப்செட், சிறந்த பேட்டரி பேக்கப், வேகமான iOS அனுபவம் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். மேலும், குறைந்த வெளிச்சத்திலும் தெளிவான புகைப்படம் எடுக்க டூயல் கேமரா சிஸ்டம் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் வசதியும் உள்ளது. USB-C சார்ஜிங் போர்ட் மற்றும் மேம்பட்ட கனெக்டிவிட்டியும் இதில் அடங்கும்.

ட்ரிபிள் கேமரா சிஸ்டம்

ஐபோன் 17 ப்ரோ மாடலை புரொஃபஷனல் பயனர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைத்துள்ளனர். இதில் ப்ரீமியம் டைட்டானியம் பாடி, மிகவும் சக்திவாய்ந்த A19 ப்ரோ சிப், மேம்பட்ட ட்ரிபிள் கேமரா சிஸ்டம், பெரிஸ்கோப் டெலிபோட்டோ ஜூம், மற்றும் ப்ரோ-லெவல் போட்டோகிராஃபி, வீடியோ ரெக்கார்டிங் அம்சங்கள் உள்ளன. அதிக பிரகாசமான ப்ரோமோஷன் டிஸ்ப்ளே, சிறந்த பேட்டரி திறன், ஆப்பிள் இன்டலிஜென்ஸ் சார்ந்த AI அம்சங்கள், மற்றும் வேகமான செயல்திறன் இந்த போனை தனித்துவமாக்குகிறது.

44
இந்த சேலில் வாங்குவது லாபகரமானதா?

புதிய ஐபோன் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு ஃபிளிப்கார்ட் GOAT சேல் ஒரு சிறந்த வாய்ப்பு. குறிப்பாக, ஐபோன் 17-க்கு ரூ.12,000 வரையிலும், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸுக்கு ரூ.22,000 வரையிலும் தள்ளுபடி கிடைப்பதால், கணிசமான பணத்தை மிச்சப்படுத்தலாம். வாங்குவதற்கு முன் வங்கிச் சலுகைகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ், மற்றும் நோ-காஸ்ட் EMI போன்ற கூடுதல் பலன்களையும் சரிபார்த்தால், இன்னும் குறைந்த விலையில் போனை வாங்க வாய்ப்புள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories