UPI சேவை முடங்கியது; கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகளில் கோளாறு

Published : Apr 12, 2025, 01:58 PM ISTUpdated : Apr 14, 2025, 05:15 PM IST

நாடு முழுவதும் UPI சேவை முடங்கியதால் சமூக ஊடகங்களில் அதுகுறித்த புகார்களைப் பலரும் பதிவுசெய்து வருகின்றனர். பயனர்கள் தோல்வியடைந்த பரிவர்த்தனைகளின் ஸ்கிரீன் ஷாட்களையும் வெளியிட்டுள்ளனர்.

PREV
15
UPI சேவை முடங்கியது; கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகளில் கோளாறு
UPI down

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஸ்தம்பித்துள்ளன. லட்சக்கணக்கான பயனர்கள் தங்கள் PhonePe, Paytm மற்றும் Google Pay போன்ற UPI செயலிலகளில் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதில் சிக்கலைச் சந்தித்து வருகின்றனர். இதனால் பணத்தை அனுப்பவோ பெறவோ முடியாத நிலையை ஏற்பட்டுள்ளதாக பலர் கூறுகின்றனர். சிறு வணிகர்கள் மற்றும் கடைக்காரர்களும் இந்தப் பிரச்சினை குறித்து புகார் கூறியுள்ளனர். தினசரி பயணக் கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்தும் பயனர்களும் வழக்கம்போல பணம் செலுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

25
UPI transactions

இந்தக் கோளாறு தொடர்ந்ததால், விரக்தியடைந்த பயனர்கள், UPI பரிவர்த்தனை பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்கத் தொடங்கினர். இதனால், டவுன் டிடெக்டர் தளத்தில் பரிவர்த்தனை முயற்சிகள் தோல்வி அடைவது, தாமதமாவது குறித்து பல புகார்கள் வேகமாகக் குவிந்துவிட்டன. ஏப்ரல் 12ஆம் தேதி நண்பகலுக்குள், 1,200 க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

35
UPI payment glitch

டவுன் டிடெக்டர் தரவுகளின்படி, சுமார் 66 சதவீத பயனர்கள் பணம் செலுத்த முயற்சிக்கும்போது சிக்கல்களை எதிர்கொண்டனர் என்று தெரிகிறது. மேலும் 34 சதவீதம் பேர் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளனர். இந்த பிரச்சனை குறிப்பிட்ட செயலி அல்லது வங்கி தொடர்பானதாக இல்லை என்றும் தெரிகிறது. இது பரவலாகவும் பல டிஜிட்டல் பேமெண்ட் தளங்களின் பயனர்களையும் பாதித்துள்ளது.

45
UPI payments

இதுகுறித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் மற்றும் புகார்கள் நிரம்பி வழிந்தன. பயனர்கள் பணம் செலுத்துவது தடைபட்ட ஸ்கிரீன் ஷாட்களை பகிர்ந்து புகார் தெரிவித்துள்ளனர். “பெட்ரோல் பங்கில் பணம் செலுத்த முடியாமல் சிக்கிக்கொண்டேன், GPay வேலை செய்யவில்லை. என்ன நடக்கிறது?” என்று பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பயனர் ட்வீட் செய்துள்ளார்.

டெல்லியில் உள்ள மற்றொரு பயனர், “PhonePe வழியாக மூன்று முறை பணத்தை அனுப்ப முயற்சி செய்தேன். ஒவ்வொரு முறையும் அது தோல்வியடைந்தது. தயவுசெய்து இதை விரைவில் சரிசெய்யவும்!” என்று பதிவிட்டுள்ளார்.

55
UPI users

UPI-ஐ இயக்கும் நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), இந்த செயலிழப்பு விரைந்து சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளது. “சில பயனர்கள் அவ்வப்போது UPI சேவையில் இடையூறுகளை எதிர்கொள்வதை நாங்கள் அறிவோம். வங்கிகள் மற்றும் UPI சேவை வழங்குநர்களுடன் இணைந்து இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும். சிரமத்திற்கு வருந்துகிறோம், உங்கள் பொறுமைக்கு நன்றி தெரிவிக்கிறோம்" என NPCI-யின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories