ஆண்ட்ராய்டு, பிக்சல் பிரிவில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்த கூகுள்!

Published : Apr 12, 2025, 10:35 AM ISTUpdated : Apr 12, 2025, 11:42 AM IST

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு, குரோம், பிக்சல் மொபைல் பிரிவுகளில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஜனவரியில் வழங்கப்பட்ட சலுகைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

PREV
15
ஆண்ட்ராய்டு, பிக்சல் பிரிவில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்த கூகுள்!
Google Employees

கூகுள் நிறுவனம் வியாழக்கிழமை தனது ஆண்டிராய்டு, குரோம், பிக்சல் மொபைல் பிரிவில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைத் தொடர்ந்து இந்த பணிநீக்க நடவடிக்கை தொடங்கியதாக இதனை முதலில் வெளிப்படுத்திய தி இன்ஃபர்மேஷன் அறிக்கை தெரிவிக்கிறது.

25
Google Layoffs

"கடந்த ஆண்டு இயங்குதளங்கள் மற்றும் சாதனங்களுக்கான பிரிவுகளை இணைத்ததிலிருந்து, நாங்கள் மிகவும் சுறுசுறுப்பாக, திறம்பட செயல்படுவதில் கவனம் செலுத்தி வருகிறோம். மேலும் ஜனவரியில் நாங்கள் வழங்கிய தன்னார்வ வெளியேற்றத் திட்டம் தவிர, கூடுதலாக ஆட்குறைப்புக்கான திட்டமும் உள்ளது" என்று கூகுள் செய்தித்தொடர்பாளர் தெரிவித்ததாக தி இன்ஃபர்மேஷன் கூறுகிறது.

35
Google latest news

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், இந்த சமீபத்திய பணிநீக்க நடவடிக்கை குறித்துக் கருத்து கேட்பதற்காக கூகுள் நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது, கூகுள் தரப்பில் உடனடியாக எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

45
Google Job Cuts

பிப்ரவரியில், கூகுள் தனது கிளவுட் பிரிவில் ஊழியர்களைக் குறைத்ததாக ப்ளூம்பெர்க் அறிவிக்கை வெளியிட்டது. மேலும் இந்த ஆட்குறைப்பு நிறுவனத்தின் ஒருசில அணிகளை மட்டுமே பாதித்திருப்பதாகவும் கூறப்பட்டது.

55
Google office

ஜனவரி 2023 இல், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 12,000 பணியாளர்களைக் குறைக்கும் திட்டத்தை அறிவித்தது. இது அதன் உலகளாவிய பணியாளர்களில் 6% ஆகும்.

Read more Photos on
click me!

Recommended Stories