கொஞ்ச நாள் பொறு தலைவா.. நாடே எதிர்பார்க்கும் 3 புதிய ஸ்மார்ட்போன்கள் வருது!

First Published | Aug 19, 2024, 1:15 PM IST

அடுத்த வாரம் Motorola G45 5G, iQOO Z9S Pro மற்றும் iQOO Z9S ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகின்றன. ஸ்னாப்டிராகன் செயலி, AMOLED டிஸ்ப்ளே, அதிவேக சார்ஜிங் போன்ற அம்சங்களுடன் இந்த போன்கள் வருகின்றன. இந்த ஸ்மார்ட்போன்களை அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் வாங்கிகொள்ளலாம்.

Upcoming Mobiles in India

உங்களுக்கும் பழைய போன் உபயோகித்து போரடித்து,விட்டதா? இப்போது புதிய ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டுள்ளீர்களா? எனவே சற்று பொறுங்கள். அடுத்த வாரம் Motorola G45 5G, iQOO Z9S Pro மற்றும் iQOO Z9S ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே, இந்த மூன்று ஸ்மார்ட்போன்களின் சில சிறப்பு அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

iQOO Z9S Pro

அதனைப் பற்றி விரிவாக பார்க்கலாம். அடுத்த வாரம் iQOO நிறுவனத்தின் iQOO Z9S Pro ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் நுழைய உள்ளது. இந்த ஃபோன் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியிடப்படும். மேலும் இந்த போனை நீங்கள் அமேசானிலிருந்து வாங்க முடியும். இந்த ஃபோனில் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 3 செயலி, அட்ரினோ 720 GPU, 5500 mAh பேட்டரி, 80 வாட் வேகமான சார்ஜ், 4500 nits பீக் பிரைட்னஸ், 120 Hz AMOLED டிஸ்ப்ளே, வளைந்த 3D கேமரா போன்ற அம்சங்கள் இருக்கும்.

Tap to resize

iQOO Z9S

iQOO Z9S ஸ்மார்ட்போனும் ஆகஸ்ட் 21 அன்று அறிமுகப்படுத்தப்படும். சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அமேசானிலிருந்து இந்த சமீபத்திய ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க முடியும். இந்த ஃபோன் 120 ஹெர்ட்ஸ் 3D வளைந்த AMOLED திரை, MediaTek Dimensity 7300 செயலி, 5500 mAh பேட்டரி, தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP64 மதிப்பீடு போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும். AI கேமரா அம்சங்கள் மற்றும் 50MP இரட்டை பின்புற கேமராவை உள்ளடக்கி உள்ளது.

Motorola G45 5G

மோட்டோரோலா நிறுவனத்தின் Motorola G45 5G போன் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களுக்காக ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதிகாரப்பூர்வ தளத்தைத் தவிர ஃப்ளிப்கார்ட்டிலிருந்து இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க முடியும். இதில் Snapdragon 6S Generation 3 செயலி, 13 5G பேண்ட்ஸ் ஆதரவு, 6.5 இன்ச் 120Hz டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 50MP குவாட் பிக்சல் கேமரா, 8GB ரேம், 128GB பேட்டரி மற்றும் RAMh50 ஜிபி ஆதரவு சேமிப்பு போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும்.

இடைவிடாமல் 150 கிமீ வரை சிறந்த ரேஞ்ச்.. வெளியாகும் பஜாஜ் பிளேட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?

Latest Videos

click me!