இனி மொபைல் நெட்வொர்க்கை மாற்றுவது அவ்ளோ ஈசி இல்ல... ஆன்லைன் மோசடிக்கு செக் வைக்கும் டிராய்!

First Published | Jun 29, 2024, 7:37 PM IST

ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் நோக்கத்துடன் MNP விதிமுறைகளை மாற்ற தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் முடிவு செய்துள்ளது.

TRAI new rules for MNP

மொபைல் எண்ணை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான எம்.என்.பி. (MNP) வசதியை பயன்படுத்த புதிய விதிகள் கொண்டுவரப்பட்ட உள்ளன. ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த விதிகள் அமலுக்கு வரவுள்ளன. ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் நோக்கத்துடன் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் விதிகளை மாற்ற முடிவு செய்துள்ளது.

சிம் கார்டு தொலைந்து போனாலோ, புதிய சிம் கார்டுக்கு மாற்றினாலோ உடனடியாக வேறு நெட்வொர்க்கிற்கு மாற முடியாது. குறிப்பிட்ட காலம் காத்திருந்து தான் எம்.என்.பி. ஆப்ஷனை பயன்படுத்த முடியும்.

UPC number for MNP

அதாவது, இப்போது நெட்வொர்க் மாறுவதற்கான UPC எண் உடனடியாக ஒதுக்கப்படுகிறது. அந்த எண்ணை மாற விரும்பும் தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் கொடுத்து, அதே எண்ணில் புதிய சிம் கார்டு வாங்கிக்கொள்ளலாம்.

இனி, நெட்வொர்க் மாறுவதற்கு குறைந்தபட்சம் 10 நாட்கள் காத்திருக்க வேண்டும். அதாவது, நெட்வொர் மாறுவதற்கான கோரிக்கை வந்தவுடன் UPC எண் ஒதுக்கப்படக் கூடாது என டிராய் உத்தரவிட்டுள்ளது.

Tap to resize

TRAI new rules

சில நிறுவனங்கள் இந்த புதிய விதிமுறைக்கு ஒப்புக்கொண்டாலும், 10 நாட்கள் காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக இருக்கிறது என்று சில நிறுவனங்கள் கூறியுள்ளன. 7 நாட்களாக குறைக்கலாம் என்று கேட்டுக்கொண்டிருக்கின்றன. 2 - 4 நாட்கள் இருந்தால் போதும் என்றும் சில நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

மோசடிக்காரர்கள் சிம் கார்டை தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவே இந்த விதிமுறை மாற்றம் செய்யப்படுகிறது என்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

Latest Videos

click me!