TRAI
ரீசார்ஜ் போல மொபைல் எண்களை நீண்டகாலம் தொடர்ந்து பயன்படுத்துவதற்கும் தனி கட்டணம் விதிக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) முடிவு செய்துள்ளது.
Telecom Services
சென்ற ஆண்டு டிசம்பரில் புதிய டெலிகாம் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் நீண்டகால பயன்பாட்டில் உள்ள எண்களுக்கு கட்டணம் விதிக்க மத்திய அரசுக்கு டிராய் பரிந்துரை செய்துள்ளது.
SIM card
தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்தோ வாடிக்கையாளர்களிடம் இருந்தோ இந்தக் கட்டணத்தை வசூலிக்கலாம் எனவும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் குறிப்பிட்டுள்ளது.
Same Mobile number
டிராய் பரிந்துரையின்படி, வாடிக்கையாளர்களிடம் இருந்து புதிதாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இதேபோன்ற கட்டணம் நடைமுறையில் உள்ளதையும் டிராய் சுட்டிக்காட்டியுள்ளது.
Old sim card fee
டிராய் பரிந்துரையை ஏற்று கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது ஒரு முறை மட்டும் செலுத்த வேண்டியதாக இருக்குமா அல்லது அடிக்கடி கட்டணம் செலுத்த வேண்டியிருக்குமா என இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.