Top AI Skills to Learn : AI தொழில்நுட்பம் பூதகரமாகி வரும் நிலையில், எந்த மாதிரியான AI திறன்களை நாம் கற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் வேலை பறிபோகும் அபாயம் இல்லாமல் இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இனிமேல் கரியரில் ஜெயிக்கணும்னா AI தான் முக்கியம். 2026-ல் AI-யை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள்தான் முன்னிலையில் இருப்பார்கள். நீங்கள் வேலை, ஃப்ரீலான்ஸ் அல்லது பிசினஸில் இருந்தாலும், இந்த 7 AI திறன்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றும். உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் அல்லது நீங்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்கக் கூடிய AI திறன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
28
ப்ராம்ப்ட் இன்ஜினியரிங்:
நீங்க AI-க்கு எப்படி இன்புட் கொடுக்கிறீங்களோ, அப்படித்தான் அது அவுட்புட் தரும். அதனால், AI-யிடம் சரியாகக் கேள்வி கேட்கக் கற்றுக்கொள்வது அவசியம். உங்கள் கேள்வி எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ரிசல்ட் சிறப்பாக இருக்கும். ChatGPT, Claude, Gemini போன்ற டூல்களைப் பயன்படுத்தி ப்ராம்ப்ட் இன்ஜினியரிங் கற்றுக்கொள்ளலாம்.
38
AI கன்டென்ட் கிரியேஷன்:
முன்பு பல மணிநேரம் எடுத்த பிளாக், போஸ்ட், விளம்பர காப்பி போன்றவற்றை இப்போது நிமிடங்களில் AI தயார் செய்துவிடுகிறது. AI உருவாக்கும் கன்டென்டை நீங்கள் சரியான இடத்தில் பயன்படுத்தினால், உங்கள் கரியரில் வேகமாக வளரலாம். Jasper, Copy.ai, Notion AI போன்ற டூல்ஸ் இதற்கு உதவும்.
இப்போது ரீல்ஸ், ஷார்ட்ஸ், விளம்பர வீடியோக்களை வெறும் டெக்ஸ்ட்டை வைத்தே AI உருவாக்கிவிடுகிறது. இனி கேமரா, லைட் அல்லது ஷூட்டிங் தேவையில்லை. 2026-ல் வீடியோதான் அதிக டிராஃபிக்கை ஈர்க்கும். Pictory, Runway, InVideo AI போன்ற பல டூல்ஸ் இதற்கு இருக்கின்றன.
58
AI மார்க்கெட்டிங் ஆட்டோமேஷன்:
ஈமெயில் அனுப்புவது, வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வது, விளம்பரங்களை நிர்வகிப்பது என எல்லாவற்றையும் AI தானாகவே செய்துவிடும். இதனால், ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்வதிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம். HubSpot AI, Zapier, ActiveCampaign போன்றவை இதற்குப் பயன்படும் சில முக்கிய AI டூல்ஸ்.
68
AI டிசைன் & கிரியேட்டிவிட்டி:
உங்களுக்கு போட்டோஷாப் அல்லது Illustrator தெரியாவிட்டாலும் கவலை வேண்டாம். AI மூலமாகவே போஸ்ட்கள், தம்ப்நெயில்கள், விளம்பர பேனர்கள் என அனைத்தையும் உருவாக்கலாம். 2026-ல் விஷுவல் கன்டென்ட்தான் எல்லாம். Canva, Mid Journey, Adobe Firefly போன்ற AI டூல்ஸ் இதற்கு உங்களுக்கு உதவும்.
78
AI டேட்டா & டிசிஷன் மேக்கிங்:
இனிமேல் உணர்வுகளின் அடிப்படையில் முடிவெடுக்காமல், டேட்டாவின் அடிப்படையில் முடிவெடுக்கும் காலம் இது. எது வேலை செய்கிறது, எது செய்யவில்லை, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை AI டேட்டாவைப் பார்த்துச் சொல்லிவிடும். இதனால் தவறான முடிவுகள் எடுப்பது குறையும். Google Analytics AI, Power BI, Tableau போன்றவை இதற்குப் பயன்படும்.
88
AI பர்சனல் பிராண்டிங்:
இப்போது உங்கள் திறமை மட்டுமல்ல, நீங்கள் யார், மக்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதும் முக்கியம். உங்கள் போஸ்ட்கள், வளர்ச்சி, அனலிட்டிக்ஸ் மற்றும் பிராண்டிங் அனைத்தையும் AI நிர்வகிக்கும். 2026-ல் பர்சனல் பிராண்ட் உள்ளவர்களுக்கு வேலை, ஃப்ரீலான்ஸ், பிசினஸ் என எல்லா இடங்களிலும் அதிக டிமாண்ட் இருக்கும். Taplio, Hootsuite AI, Shield Analytics போன்ற டூல்ஸ் இதற்கு உதவும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.