அதிவேக தொபைல் இன்டர்நெட் வசதி! இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

First Published | Dec 28, 2024, 11:57 PM IST

ஸ்பீடு டெஸ்டு நிறுனத்தின் தரவரிசைப்படி, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகள் அதிவேக மொபைல் இன்டர்நெட் சேவையைக் கொண்டுள்ளன. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 442 Mbps சராசரி மொபைல் டேட்டா வேகத்துடன் உலகளாவிய தரவரிசையில் முன்னணியில் உள்ளது.

Countries with fastest mobile Internet

மொபைல் இன்டர்நெட் பயன்பாடு உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சில நாடுகள் வேகத்தில் மற்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளுகின்றன. மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகள் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் உள்கட்டமைப்பு மற்றும் பிராந்திய காரணிகளால் அதிவேக மொபைல் இன்டர்நெட் வேகத்தை அடைவதில் சவால்களை எதிர்கொள்கின்றன. இந்தத் தடைகள் இருந்தபோதிலும், உலகளாவிய மொபைல் இன்டர்நெட் வேகம் சீராக அதிகரித்து வருகிறது.

Fastest mobile Internet

அக்டோபர் 2024இல் உலகளவில் இணைய பயனர்களின் எண்ணிக்கை 5.52 பில்லியனை எட்டியது. இது முந்தைய ஆண்டை விட 151 மில்லியன் அதிகம். தகவல்தொடர்பு, வணிகம் மற்றும் தகவல் அணுகல் ஆகியவற்றிற்கு இணையம் அத்தியாவசியமாக இருப்பதால், மொபைல் இன்டர்நெட் அதில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இப்போது ஸ்மார்ட்போன்கள் வழியாக இணைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மொபைல் இன்டர்நெட் வேகம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. சில நாடுகள் அதிவேகமான சேவைக் கொண்டுள்ளற. மற்றவை பின்தங்கியுள்ளன.

Tap to resize

Mobile Internet speed

Speedtest Global Index தரவரிசையின்படி, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகள் அதிவேக மொபைல் இன்டர்நெட் சேவையைக் கொண்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் 442 Mbps சராசரி மொபைல் டேட்டா வேகத்துடன் முதலிடத்தில் உள்ளது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட 5G நெட்வொர்க்குகளில் அதிக முதலீடு செய்திருப்பது இதற்கு முக்கியக் காரணமாகும். கத்தார் 358 Mbps, குவைத் 264 Mbps வேகத்துடன் 2வது  மற்றும் 3வது இடங்களில் உள்ளன.பல்கேரியா மற்றும் டென்மார்க் முறையே 172 Mbps மற்றும் 162 Mbps வேகத்தில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துள்ளன.

Speedtest Global Index Top 10 List

மொபைல் இன்டர்நெட் வேகத்தில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நாடுகள் தென் கொரியா, நெதர்லாந்து, நார்வே, சீனா மற்றும் லக்சம்பர்க் ஆகியவை. தென் கொரியா, அதன் பரவலான 5G நெட்வொர்க்குடன், 148 Mbps வேகத்தில் இன்டர்நெட் சேவையைப் பெற்றுள்ளன.அதே நேரத்தில் 5G உள்கட்டமைப்பை விரைவாக விரிவுபடுத்திய சீனா, 139.58 Mbps வேகத்தை எட்டியுள்ளது.

Mobile Internet in India

900 மில்லியனுக்கும் அதிகமான இணைய பயனர்களைக் கொண்ட இந்தியா, மொபைல் இணைய வேகத்தில் உலகளவில் 25வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் சராசரி மொபைல் டவுன்லோட் வேகம் 100.78 Mbps ஆகவும், அப்லோடு வேகம் 9.08 Mbps ஆகவும் இருக்கிறது. தாமதம் 30 ms ஆக உள்ளது. வேகத்தில் முன்னேற்றம் காணப்பட்டாலும், இன்னமும் டிஜிட்டல் பாகுபாட்டைக் கட்டுப்படுத்துவதிலும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் இந்தியா இன்னும் சவால்களை எதிர்கொள்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் இன்டர்நெட் சேவை மந்தமாகவே உள்ளது.

5G data speed in India

உலகளவில் மக்களை இணைப்பதில் மொபைல் இன்டர்நெட் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் விரைவான வளர்ச்சி நிலைமை படிப்படியாக முன்னேறும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. நாடுகள் தங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சியின் விளைவாக இணைய வேகமும் மேம்படும், இது உலகளாவிய டிஜிட்டல் மாற்றத்தை மேலும் துரிதப்படுத்தும்.

Latest Videos

click me!