ரிலையன்ஸ் ஜியோவின் 5 புதிய திட்டங்கள்! அன்லிமிட்டட் 5G இன்டர்நெட்! முழு விவரம் இதோ!

First Published | Dec 28, 2024, 10:26 PM IST

ஜியோ தனது 5G சேவையின் கீழ் பல அன்லிமிட்டட் டேட்டா திட்டங்களை வழங்குகிறது. இது அனைத்து வகையான பயனர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. இந்த திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு வேலிடிட்டி மற்றும் டேட்டாவின் பலனை வழங்குகின்றன. அவை குறித்து விவரமாகத் தெரிந்துகொள்வோம்.

Reliance Jio launched 5 new plans

நீங்கள் ஜியோ பயனராக இருந்து, அன்லிமிட்டட் 5G சேவைக்கான திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஜியோ தனது 5G சேவையின் கீழ் பல அன்லிமிட்டட் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் வெவ்வேறு வேலிடிட்டியுடன் கிடைக்கின்றன. இந்தப் புதிய திட்டங்களின் விவரத்தைப் பார்க்கலாம்.

Reliance Jio 5G plans

ரூ,349 திட்டம் தினமும் 2GB டேட்டா வழங்குகிறது. வேலிடிட்டி 28 நாட்கள். இதில் அன்லிமிட்டட் வாய்ஸ் கால், நாள்தோறும் 100 எஸ்.எம்.எஸ்., ஆகியவற்றுடன் ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ க்ளவுட் ஆகிய சேவைகளையும் இலவசமாக பயன்படுத்தலாம்.

Tap to resize

Unlimited 5G plans

ரூ.899 திட்டம் நாள்தோறும் 2GB டேட்டாவுடன் 20GB கூடுதல் டேட்டாவையும் தருகிறது. இந்த பிளான் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அன்லிமிட்டட் வாய்ஸ் கால், தினசரி 100 SMS ஆகியவை கிடைக்கும். மற்ற ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் இலவசம்தான்.

Reliance Jio 5G

நாள்தோறும் 2GB டேட்டா வழங்கும் ரூ.999 திட்டம் 98 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அன்லிமிட்டட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ க்ளவுட் சேவைகளையும் கூடுதல் கட்டணம் இல்லாமல் பெறலாம்.

Reliance Jio True 5G Plans

ரூ.2,025 திட்டத்தின் மூலம் தினமும் 2.5GB டேட்டா கிடைக்கும். 200 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளானிலும் ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ க்ளவுட் சேவைகள் இலவச இணைப்பாகக் கிடைக்கும். வழக்கம்போல, இதிலும் அன்லிமிட்டட் வாயஸ் கால், உண்டு. தினமும் 100 டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பலாம்.

Reliance Jio 5 new plans

ரூ.3,599 திட்டமும் ஒவ்வொரு நாளும் 2.5GB டேட்டாவைத் தருகிறது. 365 நாட்களுக்கான இந்தத் திட்டம் அன்னிலிமிட்டட் அழைப்புகள், தினமும் 100 SMS, ஆகியவற்றுடன் ஜியோ டிவி, ஜியோ க்ளவுட் சேவைகளும் கிடைக்கும். 

Reliance Jio best 5G data plan

ஜியோவில் இவை தவிர ஏற்கெனவே கிடைக்கும் 5G திட்டங்கள் பல உள்ளன. அவற்றின் விவரம் பின்வருமாறு:

ரூ.749: தினமும் 2 GB + 20 GB 72 நாட்களுக்கு

ரூ.859: தினமும் 2 GB 84 நாட்களுக்கு

ரூ.719: தினமும் 2 GB  70 நாட்களுக்கு

ரூ.629: தினமும் 2 GB  56 நாட்களுக்கு

ரூ.399: தினமும் 2.5 GB  28 நாட்களுக்கு

ரூ.449: தினமும் 3 GB 28 நாட்களுக்கு

ரூ.1,028: தினமும் 2 GB 84 நாட்களுக்கு

ரூ.1,199: தினமும் 3 GB 84 நாட்களுக்கு

Reliance Jio plan for 5G internet

இதில் எந்த திட்டம் உங்களுக்கு சரியானது?

ரூ.349 மற்றும் ரூ.399 க்கான திட்டங்கள் குறுகிய காலத் தேவைக்கு ஏற்றவையாக இருக்கும். அதே நேரத்தில் ரூ.2,025 மற்றும் ரூ.3,599 திட்டங்கள் நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். அனைத்து திட்டங்களும் JioCinema, JioTV மற்றும் JioCloud போன்ற கூடுதல் சேவைகளைப் இலவசமாகத் தருபவை. இத்தனையும் அதிவேக டேட்டா, அளவில்லாத போன் கால் மற்றும் தினசரி எஸ்எம்எஸ் போன்ற அடிப்படையான வசதிகளுடன் கூடுதலாகக் கிடைக்கின்றன.

Latest Videos

click me!