ஒன்பிளஸ் தீபாவளி சேல்ஸ்; Nord மாடலுக்கு தாறுமாறான டிஸ்கவுண்ட்!

First Published | Sep 26, 2024, 10:55 AM IST

ஒன்பிளஸ் நிறுவனம் 'OnePlus Festive sale' என்ற பெயரில் விழாக்கால சலுகை விற்பனையை இன்று செப்டம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

OnePlus Festive Sale 2024

ஒன்பிளஸ் நிறுவனம் 'OnePlus Festive sale' என்ற பெயரில் விழாக்கால சலுகை விற்பனையை இன்று செப்டம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்குகிறது. #MakeItSpecial என்ற கருப்பொருளின் கீழ், ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களான OnePlus Nord 4, OnePlus 12 மற்றும் OnePlus Open போன்றவற்றிற்கு நம்பமுடியாத சலுகைகளை வழங்குகிறது.

oneplus.in, Amazon.in மூலம் ஆன்லைனில் இந்த சலுகை விற்பனை நடைபெறுகிறது. ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்கள் மூலம் ஆஃப்லைனிலும் வாங்கலாம். பார்ட்னர் ஸ்டோர்களான ரிலையமன்ஸ் டிஜிட்டல், பஜாஜ் எலெக்ட்ரானிக்ஸ், க்ரோமா, விஜய் சேல்ஸ் ஆகியவற்றிலும் வாடிக்கையாளர்கள் சலுகை விலையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.

OnePlus 12, OnePlus 12R

இன்று முதல் OnePlus 12 ஸ்மார்ட்போன் வாங்கினால் OnePlus Buds Pro 2 இலவசமாகப் பெறலாம். OnePlus 12 வாங்கும் வாடிக்கையாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் 7,000 ரூபாய் வரை உடனடி வங்கித் தள்ளுபடியையும், 6 மாதங்கள் வரை கட்டணமில்லா EMIஐயும் பெறலாம். OnePlus 12 வாங்கும் போது 2,000 ரூபாய்க்கான சிறப்பு கூப்பனையும் பெறலாம்.

OnePlus 12R இல், வாடிக்கையாளர்கள் ரூ.3,000 வரை வங்கி தள்ளுபடியைப் பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்களில் 6 மாதங்கள் வரை கட்டணமில்லா EMI வசதியும் கிடைக்கும். செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 28 வரை, ஒன்பிளஸ் மொபைல்களின் 8GB+256GB மற்றும் 16GB+256GB வேரியண்ட்களுக்கு ரூ.5,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

Tap to resize

செப்டம்பர் 29 முதல், 8GB+256GB வேரியண்ட்களுக்கு ரூ.5,000 வரையிலும், 16GB+256GB வேரியண்ட்களுக்கு ரூ.3000 வரையிலும் தற்காலிக சலுகை கிடைக்கும்.ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் oneplus.in இலிருந்து 8GB+256GB மாடலை வாங்கினால் ரூ.2000 கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம்.

OnePlus Nord 4ஐ வாங்க விரும்புவோர், 2,000 ரூபாய் வரை வங்கித் தள்ளுபடியில் வாங்கலாம். குறிப்பிட்ட வங்கி கார்டுகளுக்கு 6 மாதங்கள் வரை கட்டணமில்லா EMI வசதியும் உண்டு. 8GB+128GB / 12GB+256GB மாடல்களுடன் ரூ.2,000 மதிப்பிலான சலுகை கூப்பன் தரப்படும். 8GB+256GB மாடலுக்கு ரூ.3,000 மதிப்புள்ள சலுகை கூப்பன் கிடைக்கும்.

Oneplus 13

Oneplus.in இணையதளத்தில் OnePlus Nord 4 மொபைலை வாங்கும் மாணவர்கள் OnePlus Nord Buds 3 Pro, OnePlus Nord Buds 3, OnePlus Nord Buds 2 மற்றும் OnePlus Nord Buds 2r ஆகியவற்றிற்கு 1000 ரூபாய் தள்ளுபடியைப் பெறலாம்.

OnePlus Nord CE4 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகள் மூலம் 1,500 ரூபாய் வரை வங்கி தள்ளுபடியும், 3 மாத கட்டணமில்லா EMI ஆப்ஷனும் உள்ளது. இத்துடன் OnePlus Nord Buds 2R இலவசமாகவும் கிடைக்கும்.

Oneplus 13

OnePlus Nord CE4 Lite 5G மொபைலை வாங்கும் வாடிக்கையாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளுடன் ரூ.2000 வரை வங்கி தள்ளுபடி பெறலாம். 3 மாதங்கள் வரை கட்டணமில்லா EMI ஆப்ஷனும் உண்டு. OnePlus Nord CE4 Lite ஐ வாங்கும்போது 1000 ரூபாய்க்கான சிறப்பு கூப்பனும் கிடைக்கும்.முடியும்.

OnePlus Open Apex எடிஷன் ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள் OnePlus Watch 2 ஸ்மார்ட் வாட்சை இலவசமாகப் பெற முடியும். ரூ. 20,000 வரை வங்கி தள்ளுபடி பெறும் வாய்ப்பும் உள்ளது. 12 மாதங்கள் வரை கட்டணமில்லா EMI மூலம் வாங்கும் வசதியும் இருக்கிறது. ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் oneplus.in இலிருந்து வாங்கினால் ரூ. 5000 கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம்.

Latest Videos

click me!