ஐபோன் 16 வாங்கியவுடன் பிரச்சினை ஆரம்பிச்சுருச்சு... டச் ஸ்கிரீன் சரியில்லை என கதறும் பயனர்கள்!

First Published Sep 23, 2024, 1:21 PM IST

சமீபத்தில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் டச் ஸ்கிரீன் பிரச்சினை இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் பிரச்சினை எதனால் ஏற்பட்டது, தீர்வு என்ன என்று தெரிந்துகொள்ளலாம்.

iPhone 16 Pro complaints

ஐபோன் 16 ப்ரோ கடந்த வாரம் செப்டம்பர் 20ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் பிரமாண்டமாக நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்த சில நாட்களில் உலகெங்கிலும் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் ஆயிரக்கணக்கான ஐபோன் பிரியர்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.

iPhone 16 Pro touchscreen issue

ஐபோன் 16 ஸ்மார்ட்போன்களை வாங்கிய பயனர்களின் கருத்துகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. அவர்களில் ஒரு சில பயனர்கள் மொபைலின் டச் ஸ்கிரீனில் சிக்கல்கள் உள்ளதாகப் புகார் கூறுகின்றனர். ட்ச் மற்றும் ஸ்வைப்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றும் இதனால் ஸ்க்ரோலிங் மற்றும் டைப்பிங் ஆகியவற்றை மேற்கொள்வதில் பிரச்சினை உள்ளது என்றும் பயனர்கள் கூறுகின்றனர்.

Latest Videos


iPhone 16 Pro touch unresponsive

சில பயனர்களின் புகார்களை வெளியிட்டுள்ள 9to5Mac, பிரச்சினைக்கான காரணத்தையும் ஆராய்ந்து கூறியுள்ளது. ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) ட்ச் ஸ்கிரீனில் உள்ள சிக்கல் மென்பொருள் கோளாறு காரணமாக தோன்றியதாகத் தெரிகிறது எனக் சொல்லப்படுகிறது. இந்தக் குறையை புதிய அப்டேட் மூலம் சரிசெய்யலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

iPhone 16 Pro touch rejection algorithm

அதிக உணர்திறன் கொண்ட டச் ரிஜெக்‌ஷன் அல்காரிதம் (touch rejection algorithm) காரணமாக இந்தச் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் சில சமயம் டச் வேலை செய்யாமல் நிராகரிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

டச் செயல்பாட்டில் உள்ள இந்தப் பிரச்சினை ஸ்கிரீன் லாக் செய்யப்பட்டிருக்கும்போது ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஃபோன் லாக் திறக்கப்பட்டதும் பிரச்சினை ஆரம்பித்துவிடுகிறது. ஹோம் ஸ்கிரினில் உள்ள பக்கங்களை ஸ்வைப் செய்யும்போதும், ஆப் மெனுவில் ஸ்க்ரோலிங் செய்யும்போதும் சிக்கல் வருகிறது. இதனால், ஹார்டுவேர் பிரச்சினை இருக்க வாய்ப்பு இல்லை என்றும் டச் பிரச்சினை சாப்ட்வேர் தொடர்பானது தான் என்றும் கணிக்கலாம்.

iPhone 16 Pro iOS 18 update

iOS 18 மற்றும் iOS 18.1 பீட்டா இயங்குதளங்களில் செயல்படும் ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் மட்டும்தான் டச் பிரச்சினை இருப்பதாக புகார் கூறியுள்ளனர். ஆப்பிள் நிறுவனம் சார்பில் இந்த சிக்கலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் விரைவில் சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் பிரச்சினை சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

iPhone 16 Pro price in India

இந்தியாவில் ஐபோன் 16 ப்ரோ மொபைலின் 128GB ஸ்டோரேஜ் கொண்ட பேசிக் வேரியண்ட் ரூ.1,19,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 256GB, 512GB மற்றும் 1TB ஸ்டோரேஜ் கொண்ட மாடல்களின் விலை முறையே ரூ.1,29,900, ரூ.1,49,900 மற்றும் ரூ,1,69,900.

click me!