விவரக்குறிப்புகள்
ஜியோ பாரத் V2 ஆனது 1.77 இன்ச் QVGA இன்பில்ட் திரையுடன் 240 x 320 பிக்சல் ஸ்கிரீன் கொண்டுள்ளது. போனில் 0.3 மெகாபிக்சல் கேமரா, 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த போனில் எக்ஸ்டர்னல் மெமரியை 128ஜிபி வரை விரிவுபடுத்தலாம். 4G ஆதரவு மற்றும் UPI கட்டண ஆப்ஷனும் உள்ளது, இதனால் பயனர்கள் சிரமமின்றி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த முடியும். தவிர, ஜியோ சினிமா, ஜியோ சாவ்ன் போன்ற ஜியோவின் பல பயன்பாடுகளும் போனில் கிடைக்கின்றன.