BSNL Network
நாளுக்கு நாள் வேகமாக மாறி வரும் நவீன உலகில் செல்போன், இணையதள பயன்பாடு இன்றி அமையாததாக உள்ளது. 4 நபர்கள் உள்ள குடும்பத்தில் குறைந்தபட்சம் 2 முதல் 3 செல்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒருசில குடும்பங்களில் 4 செல்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனிடையே தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், விஐ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் சேவைக் கட்டணத்தை கணிசமாக உயர்த்தின.
BSNL Network
இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் குறைந்த கட்டணத்தில் தொலைத்தொடர்பு சேவை வழங்கப்பட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் அதிருப்தி குறைந்ததாக தெரியவில்லை. அப்போது தான் பொதுமக்களுக்கு இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவனத்தின் மீது பார்வையே திரும்பியது.
BSNL Network
BSNLல் 5G சேவை இல்லாவிட்டாலும் கட்டணம் குறைவு என்ற ஒரே காரணத்திற்காக BSNL ஐ நாடும் வாடிக்கையாளர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்திக்கொள்ளும் BSNL அதிரடியாக தனது கட்டணத்தை குறைத்து வருவதோடு பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும் நடைமுறைபடுத்தி வருகிறது.
BSNL Network
அந்த வகையில் தற்போது D2D என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது. Direct to Device என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நெட்வொர்க் இல்லாத இடங்களில் கூட உங்களால் அவசரகால அழைப்புகளை மேற்கொள்ள முடியும். நேரடியாக சேட்டிலைட் உதவியோடு சிக்னல் இல்லாத இடங்களிலும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இது தான் D2D என்று BSNL விளக்கம் அளிக்கிறது. செல்போன் அழைப்பு மட்டுமல்லாது UPI மூலம் பணப்பரிவர்த்தனையும் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகாத நிலையில் இதனை சாத்தியப்படுத்துவதற்கான சோதனை முயற்சியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.