சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லாவைத் தவிர, இந்த விருந்தில் மைக்ரானின் சஞ்சய் மெஹ்ரோத்ரா, TIBCO மென்பொருள் தலைவர் விவேக் ரணதிவே, பலந்திர் நிர்வாகி ஷியாம் சங்கர் ஆகிய மூன்று இந்திய வம்சாவளி தலைமை நிர்வாக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அவர்களைத் தவிர, மெட்டாவின் மார்க் ஜுக்கர்பெர்க், கூகிள் நிறுவனர் செர்ஜி பிரின், ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், நிறுவனர் கிரெக் ப்ரோக்மேன், ஆரக்கிள் தலைமை நிர்வாக அதிகாரி சஃப்ரா கேட்ஸ், ப்ளூ ஆரிஜின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் லிம்ப், ஸ்கேல் ஏஐ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸாண்ட்ரா வாங் போன்ற பிரபலங்களும் கலந்து கொண்டனர். வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் இந்த இரவு உணவு வழங்கப்பட்டது.
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தான் அழைக்கப்பட்டதாகக் கூறி இருந்தார். ஆனால் அவர் இரவு உணவைத் தவிர்த்தார். சில மாதங்களுக்கு முன்பு மஸ்க் எதிர்த்த 'பிக் பியூட்டிஃபுல் மசோதா' தொடர்பாக மஸ்க், டிரம்ப் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.
இந்த மீட்டிங்கில் மொத்தம் ஐந்து இந்தியாவைச் சேர்ந்த அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டாலும் சுந்தர் பிச்சை மட்டுமே டிரம்புடன் நேருக்கு நேர் அமர வாய்ப்பு கிடைத்தது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு சீனாவில் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உலகின் மிகப்பெரிய சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் நிறுவனங்களின் தலைவர்களை நேருக்கு நேர் சந்தித்தார்.