ஸ்மார்ட்போன் முதல் ஸ்மார்ட் ரிங் வரை... மொத்த வித்தையையும் இறக்கிய சாம்சங்... கேஜெட் பிரியர்கள் குதூகலம்!

First Published | Jul 10, 2024, 11:15 PM IST

சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்ஸ் மற்றும் முதல் ஸ்மார்ட் மோதிரம் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது.

Samsung Unpacked Highlights

சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்ஸ் மற்றும் முதல் ஸ்மார்ட் மோதிரம் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது.

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டில் நடத்தியுள்ள இரண்டாவது மிகப் பெரிய நிகழ்வில் இந்த சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சி கேலக்ஸி அன்பேக்டு (Galaxy Unpacked) என்ற பெயரில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் Samsung Galaxy Z Fold6, Galaxy Z Flip6, Galaxy Watch Ultra, Galaxy Watch7 மற்றும் Galaxy Buds3 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. இவை தவிர, கேலக்ஸி ரிங் (Galaxy Ring) என்ற முற்றிலும் புதிய ஸ்மார்ட் மோதிரத்தையும் சாம்சங் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

Samsung Galaxy Z Fold6 and Z Flip6 foldable phones

சாம்சங்கின் சமீபத்திய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களான Galaxy Z Fold6 மற்றும் Galaxy Z Flip6 ஆகியவை அதிக கவனம் பெற்றுள்ளன. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட் மூலம் இயக்கப்படும் கேலக்ஸி இசட் ஃபோல்ட்6, இப்போது சற்று பெரிய ஸ்கிரீனுடன் வந்திருக்கிறது.

Galaxy Z Flip6 முந்தைய மாடலின் வடிவமைப்பைத் தக்கவைத்துள்ளது. ஆனால் இப்போது 50MP இரட்டை கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இரண்டுமே Galaxy AI அம்சத்தைக் கொண்டது. இதில் நோட் அசிஸ்ட், லைவ் டிரான்ஸ்லேட், டெக்ஸ்ட் சஜஷன் போன்ற பல வசதிகள் இருக்கும். 

Tap to resize

Samsung Galaxy Ring

சாம்சங் தனது ஸ்மார்ட் மோதிரத்தை கேலக்ஸி ரிங் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வித்தியாசமான சாதனம் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதற்கு பயன்படக்கூடியது. நாள் முழுவதும் தூக்கம், இதய துடிப்பு உள்ளிட்ட பல அம்சங்களை கண்காணிக்கிறது.

கேலக்ஸி ரிங் ஒரு சிறிய சக்திவாய்ந்த ஆரோக்கிய துணைவனாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஏழு நாட்கள் வரை பேட்டரி ஆயுள் கொண்டது. 10ATM வாட்டர் ப்ரூஃப் உத்தரவாதமும் கொடுக்கப்படுகிறது. மூன்று வண்ணங்களில் ஒன்பது அளவுகளில் கிடைக்கும்.

Samsung Galaxy Watch Ultra and Watch7

சாம்சங் தனது சக்திவாய்ந்த ஸ்மார்ட்வாட்ச்சான கேலக்ஸி வாட்ச் அல்ட்ராவை இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த வாட்ச் டைட்டானியத்தை பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது. நீடித்து உழைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. உடற்பயிற்சிகளைக் கண்காணிப்பதற்கான மல்டி-ஸ்போர்ட்ஸ் டயல் கொண்டது. 100 மணிநேரம் வரை தாக்குப்பிடிக்கும் பேட்டரி ஆயுள் கொண்டது. இந்த வாட்ச் சாம்சங்கின் புதிய Exynos W1000 சிப்செட்டில் இயங்குகிறது.

கேலக்ஸி வாட்ச் 7 40மி.மீ. மற்றும் 44 மி.மீ. அளவுகளில் கிடைக்கிறது. இதுவும் சக்திவாய்ந்த Exynos W1000 சிப்செட்டைக் கொண்டுள்ளது. இதில் FDA அங்கீகாரம் பெற்ற Sleep Apnea கண்காணிப்பு, AGEs கண்காணிப்பு உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன. சாம்சங் வாட்ச்சில் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களைக் கட்டுப்படுத்தவும் வேறு தேவைகளுக்காகவும் பயன்படுத்தும் வகையில் பிஞ்ச் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy Buds3 and Galaxy Buds3 Pro

சாம்சங் தனது TWS இயர்பட்ஸ் வரிசையையும் விரிவுபடுத்தியுள்ளது. புதிய Galaxy Buds3 மற்றும் Buds 3 Pro ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. பட்ஸ்3 மற்றும் பட்ஸ்3 ப்ரோ இரண்டும் வடிவமைப்பைக் கொண்டுள்ளன. மேம்பட்ட ஆடியோ தரத்தையும் வழங்குகின்றன.

இரண்டு மாடல்களும் Galaxy AI அம்சத்தைக் கொண்டவை. இந்த ஏ.ஐ. அம்சம் ரியல்-டைம் மொழிபெயர்ப்பு வசதியை உள்ளடக்கியது. பட்ஸ்3 ப்ரோவில் இரைச்சலைக் கட்டுப்படுத்தும் அம்சமும், அவசர கால எச்சரிக்கை வழங்கும் சைரனும் உள்ளது.

Latest Videos

click me!