பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் பிக் மில்லியன் டேஸ் சேல் 2026 சிறப்பு விற்பனையில், பிரீமியம் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்க இருக்கின்றன. இதில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போன் அதிக தள்ளுபடியுடன் கிடைக்க இருக்கிறது. வருகிற அக். 9ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் தொடங்க இருக்கிறது. இதில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 FE ஸ்மார்ட்போனின் 8GB RAM + 128GB Storage வேரியண்ட்டை ரூ.46,999 விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,001 தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.42,998 விலைக்கு வாங்கிக்கொள்ள முடியும். அதேபோல், 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் EMI சலுகையிலும் Samsung Galaxy S25 FE ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமானபோது, 8GB RAM + 128GB Storage வேரியண்ட்டின் விலை ரூ.59,999 ஆக இருந்தது. தற்போது நேரடியாக விலை குறைப்பில் கிடைக்க இருக்கிறது.
இந்த விலை குறைப்பு மற்றும் பேங்க் கார்டு தள்ளுபடி ஆகியவற்றுடன் சேர்த்து, அறிமுக விலையில் இருந்து ரூ.17,001 தள்ளுபடியில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 FE ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ள முடியும். ஆர்மர் அலுமினியம் ஃப்ரேம் டிசைனில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் Navy, Jet Black மற்றும் White ஆகிய கலர்களில் கிடைக்கிறது.