இன்றைய இளைஞர்களின் திறமையின் அடையாளம் சமூக ஊடகங்கள். பல இளைஞர்கள் சமூக ஊடகங்கள் வழியாக பிரபலமாவது மட்டும் அல்லாமல் நல்ல வருவாயும் ஈட்டி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது ஒரு புதிய இளைஞர் சேர்ந்துள்ளார்.
21 வயதான பொறியாளர் கனவ், சமூக ஊடக தளமான எக்ஸ் சமூக வலைத்தளத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு ₹35,000-க்கு மேல் வருமானம் ஈட்டி வருவதாகக் கூறியுள்ளார். ஜூலை மாதம் ₹35,000-க்கு மேல் வருமானம் ஈட்டியதாகவும், ஆகஸ்ட் மாதம் ₹32,000-க்கு மேல் வருமானம் ஈட்டியதாகவும் கனவ் தெரிவித்துள்ளார்.
ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 30 வரை, எக்ஸ் தளத்தின் மூலம் ₹67,420 வருமானம் பெற்றதற்கான ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த வருவாய், ஐந்து தவணைகளில் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு தவணையின் மிகப்பெரிய தொகை ₹21,097 ஆகும்.