இரத்த அழுத்தம் அதிகரித்தால் உடனே வரும் அறிவிப்பு - ஆப்பிள் வாட்ச் அசத்தல்

Published : Sep 17, 2025, 10:54 AM IST

ஆப்பிள் வாட்ச் (Apple Watch) உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறிய ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் உங்களுக்கு எச்சரிக்கை அனுப்பும்.

PREV
15
ஆப்பிள் வாட்ச் உயர் இரத்த அழுத்தம்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் பிரச்சனை தான் உயர் இரத்த அழுத்தம். இதயம், மூளை, சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி, இதய நோய், பக்கவாதம் போன்ற அபாயங்களை அதிகரிக்கும். இதனை முன்கூட்டியே கண்டறிதல், தொடர்ந்து கண்காணித்தல் ஆகியவை மிக முக்கியம். இதற்காகவே, ஆப்பிள் வாட்ச் தற்போது ஒரு புதிய ஆரோக்கிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

25
உயர் இரத்த அழுத்தம்

இந்த உயர் இரத்த அழுத்த அறிவிப்பு வசதி, ஆப்பிள் வாட்ச்-இன் மேம்பட்ட ஹார்ட் சென்சார் மற்றும் நவீன அல்காரிதம் உதவியுடன் இயங்குகிறது. 30 நாட்கள் தொடர்ச்சியாக இதயத் துடிப்பு தரவை கண்காணித்து, அவற்றில் உள்ள பிரச்சனைக்கான அறிகுறிகளை கண்டறிந்தால் பயனருக்கு அறிவிப்பு அனுப்பப்படும். இது மருத்துவ பரிசோதனைக்கு மாற்றாகாது, ஆனால் மருத்துவரை அணுகுவது, வாழ்க்கை முறையை சீர்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும்.

35
ஆப்பிள் ஹெல்த் அம்சங்கள்

ஆப்பிள் வாட்ச் எப்படி வேலை செய்கிறது? வாட்ச், உங்கள் இதயத் துடிப்பின் போக்குகளை தொடர்ந்து சேகரிக்கிறது. அதில் உயர் இரத்த அழுத்தம் தொடர்பான சீரற்ற தன்மைகள் இருப்பதை உணர்ந்தால், நேரடியாக உங்கள் வாட்ச்-க்கு எச்சரிக்கை அனுப்பப்படும். இதனால் பயனர்கள் தங்கள் இதய ஆரோக்கியத்தைப் பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.

45
இரத்த அழுத்த எச்சரிக்கை

இந்த அம்சம் தற்போது சீரிஸ் 9, சீரீஸ் 10, சீரீஸ் 11, அல்ட்ரா 2, அல்ட்ரா 3 போன்ற மாடல்களில் கிடைக்கும். இதைப் பயன்படுத்த 22 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு இந்த அம்சம் பொருந்தாது. மேலும், ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் கண்டறியப்பட்டவர்களுக்கு இது தேவையில்லை என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

55
இதயத் துடிப்பு கண்காணிப்பு

இந்த அம்சத்தை இயக்க எளிது. உங்கள் ஐபோனில் Health App திறந்து, சுயவிவரம் → Health Checklist → High Blood Pressure Notifications சென்று, உங்கள் வயது, மருத்துவ வரலாறு போன்ற விவரங்களை உறுதிப்படுத்தினால் போதும். அப்படிச் செய்தவுடன், ஆப்பிள் வாட்ச் உங்களின் இதய ஆரோக்கியத்தை தினசரி ஆராய்ந்து, தேவையான எச்சரிக்கைகளைத் தரும்.

Read more Photos on
click me!

Recommended Stories