செப்டம்பர் 23 முதல் தொடங்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் (Amazon Sale), பிரீமியம் மாடலான ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் Nord CE 4-க்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் செப்டம்பர் 23 முதல் தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போல, இந்த முறையும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி காத்திருக்கிறது. அதில் முக்கியமாக பேசப்படும் மாடல் ஒன்பிளஸ் 13. ஒன்பிளஸ் 13 இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமானது. மூன்று ஸ்டோரேஜ் வகைகளில் இது கிடைக்கிறது.
25
ஒன்பிளஸ் 13 விலை தள்ளுபடி
அவை 12GB + 256GB (ரூ.72,999 முதல்), 16GB + 512GB (ரூ.76,999), 24GB + 1TB (ரூ.89,999). நிறங்களில் Midnight Ocean, Arctic Dawn, Black Eclipse போன்ற பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன. இந்த போனில் 6.88 அங்குல QHD+ ProXDR டிஸ்பிளே, 120Hz refresh rate, in-display fingerprint sensor உள்ளது. IP68/IP69 சான்றிதழ் இந்த ஒன்பிளஸ் மொபைலுக்கு உள்ளதால் நீரில் மூழ்கினால் சேதமடையாது.
35
ஒன்பிளஸ் 13 அம்சங்கள்
மேலும் Qualcomm Snapdragon 8 Elite processor மற்றும் அதிகபட்சம் 1TB ஸ்டோரேஜ் + 16GB RAM வசதி கிடைக்கிறது. பேட்டரி விஷயத்தில், 6000mAh திறன் கொண்டது. அதற்கு 100W கம்பி சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் என இரண்டு வசதிகளும் உள்ளன. கேமரா பிரிவில் 50MP + 50MP + 50MP என மூன்று பின்புற கேமரா செட் அப் மற்றும் 32MP முன் கேமரா உள்ளது. இதனால் புகைப்படம், வீடியோ எதற்கும் பிரீமியம் தரம் கிடைக்கும்.
இதற்கிடையில், நடுத்தர விலையிலான ஒன்பிளஸ் Nord CE 4-க்கும் பெரிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2024ல் வெளியான இந்த போன், தற்போது ரூ.18,000க்குள் கிடைக்கிறது. ரூ.5,500க்கும் மேல் தள்ளுபடி கிடைக்கிறது. இதில் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் மற்றும் சக்திவாய்ந்த 5500mAh பேட்டரி உள்ளது.
55
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆஃபர்
அதனால் குறைந்த விலையில் ஒரு நல்ல 5G ஸ்மார்ட்போன் தேடுபவர்களுக்கு ஒன்பிளஸ் 13 சிறந்த தேர்வு ஆகும். தற்போது ரூ.69,999க்கு இந்த போன், பண்டிகை சலுகையில் வெறும் ரூ.57,999க்கு வாங்க கிடைக்கிறது. இதில் வங்கிகளின் சிறப்பு சலுகைகளும் அடங்கும். ஆனால் முழு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.