மத்திய அரசு வேலை கனவா? ரயில்வேயில் 22,000 காலியிடங்கள் அறிவிப்பு - சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published : Dec 24, 2025, 09:50 PM IST

RRB Recruitment ரயில்வேயில் 22,000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு! 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000. கடைசி தேதி 20.02.2026.

PREV
16
RRB Recruitment மத்திய அரசு வேலை கனவா? மாபெரும் வாய்ப்பு இதோ!

மத்திய அரசு வேலையில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தி வெளியாகியுள்ளது. இந்திய ரயில்வே துறையானது (Railway Recruitment Board - RRB) நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 22,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கான இந்த அரிய வாய்ப்பு குறித்த முழு விவரங்களை இங்கே காண்போம்.

26
எந்தெந்த பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு?

ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, Level-1 பதவிகளான பாயிண்ட்ஸ்மேன் (Pointsman), உதவியாளர் (Assistant) மற்றும் டிராக் மெயின்டெய்னர் (Track Maintainer) உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தியா முழுவதும் சுமார் 22,000 காலிப்பணியிடங்கள் (தோராயமாக) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

36
கல்வித் தகுதி என்ன?

இந்த வேலைவாய்ப்பின் சிறப்பம்சமே இதன் கல்வித் தகுதிதான்.

• அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10-ம் வகுப்பு (Matriculation / SSLC) தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.

• அல்லது, ஐடிஐ (ITI) முடித்தவர்கள் மற்றும் தேசிய அப்ரண்டிஸ் சான்றிதழ் (NAC) பெற்றவர்களும் இந்த வேலைக்குத் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

46
சம்பளம் மற்றும் வயது வரம்பு

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்கழுவின் படி, அடிப்படை மாதச் சம்பளமாக ரூ.18,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இதர படிகளும் வழங்கப்படும்.

56
வயது வரம்பு

• வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.

• வயது தளர்வு: எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை எப்படி இருக்கும்?

தகுதியான பணியாளர்கள் கீழ்கண்ட நான்கு நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

1. கணினி வழித் தேர்வு (Computer Based Test - CBT)

2. உடல் தகுதித் தேர்வு (Physical Efficiency Test - PET)

3. சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)

4. மருத்துவப் பரிசோதனை (Medical Examination)

66
விண்ணப்பக் கட்டணம் மற்றும் காலக்கெடு

பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

• விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 21.01.2026

• விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 20.02.2026

விண்ணப்பிப்பது எப்படி?

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rrbapply.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தகுதிகளை உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories