கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன. இன்னும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன பரிசு கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? கவலை வேண்டாம்! தொழில்நுட்ப பிரியர்களுக்கும், ஸ்மார்ட்போன் விரும்பிகளுக்கும் ஏற்ற சில பிரீமியம் மற்றும் சிறந்த கேட்ஜெட்டுகளின் பட்டியலை இங்கே தொகுத்துள்ளோம். கடைசி நிமிடத்தில் வாங்கினாலும், இது நிச்சயம் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
26
கேமிங் பிரியர்களுக்கு: Realme GT 8 Pro
மொபைல் கேம்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உடன் வருகிறது. புகைப்படங்களுக்கு 50MP மெயின் கேமரா, 200MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் செல்ஃபி எடுக்க 32MP முன் கேமரா உள்ளது.
• விலை: 12GB ரேம் மாடல் ரூ.72,999-க்கும், 16GB ரேம் மாடல் ரூ.78,999-க்கும் கிடைக்கிறது.
36
வேகம் மற்றும் செயல்திறன்: OnePlus 15R
அடுத்ததாக, ஒன்பிளஸ் 15R (OnePlus 15R) ஸ்மார்ட்போன். இதுவும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் மற்றும் மிகப்பெரிய 7400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. நீண்ட நேரம் சார்ஜ் நிற்பதோடு, அதிவேகமாக சார்ஜ் ஆகும் வசதியும் இதில் உள்ளது. ஸ்ட்ரீமிங் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு இது மிகச்சிறந்தது.
• கிடைக்கும் இடம்: அமேசான் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் இணையதளத்தில் டிசம்பர் 22 முதல் விற்பனைக்கு வருகிறது.
உங்கள் பரிசு வீட்டை அலங்கரிக்க வேண்டும் என்றால், எலிஸ்டாவின் 65-இன்ச் 4K கூகுள் டிவி (Elista TDU85GA) சரியான தேர்வு. இது 4K மற்றும் HDR10 ஆதரவுடன், டால்பி ஆடியோவையும் கொண்டுள்ளது. தியேட்டர் போன்ற அனுபவத்தை வீட்டிலேயே பெற இது உதவும். இதில் 2GB ரேம் மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.
56
புகைப்படக் கலைஞர்களுக்கு: iQOO 15
ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸருடன் வருகிறது. இதில் 50MP மெயின் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட டெலிபோட்டோ லென்ஸ் உள்ளது. குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டது.
• விலை: இதன் 12GB ரேம் வேரியண்ட் ரூ.72,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
66
நம்பகமான தேர்வு: Samsung Galaxy S24
சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24) ஒரு கச்சிதமான மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன். 6.2 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே மற்றும் 50MP டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. இதன் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 12MP செல்ஃபி கேமரா கிறிஸ்துமஸ் நினைவுகளை அழகாகப் பதிவு செய்ய உதவும்.
• விலை: இதன் விலை ரூ.46,999 முதல் தொடங்குகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.