பிளாக் கோல்டு டிசைனில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்! லீக்கான டெஸ்டிங் வீடியோ!

First Published | Oct 31, 2023, 9:15 AM IST

சமூக வலைத்தளங்களில் பரவிவரும் வீடியோவில் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் கவர்ச்சிகரமான கோல்டு பிளாக் டிசைனில் இருப்பதை பார்க்க முடிகிறது. 

Royal Enfield Himalayan 450 Launch in India

பழமையான மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான ராயல் என்ஃபீல்டு, புதிய ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. நவம்பர் 7ஆம் தேதி இந்த பைக் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவிவரும் வீடியோவில் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் கவர்ச்சிகரமான கோல்டு பிளாக் டிசைனில் இருப்பதை பார்க்க முடிகிறது. பைக்கின் இறுதிக்கட்ட சோதனையின்போது இந்த வீடியோ எடுக்கப்பபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Royal Enfield Himalayan 450 Hanle Black

ஹிரன்மோய் பெரா என்பவர் தனது யூடியூப் சேனலில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் சோதனை வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்தச் சின்ன வீடியோவில், புத்தம் புதிய ஹிமாலயன் 450 சோதனைச் சாவடி ஒன்றில் நிறுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். பின், முன் ஸ்போக் சக்கரங்கள் கோல்டு கலரில் இருக்கின்றன. ஓட்டுநர் இருக்கையின் மையப் பகுதியிலும், பெட்ரோல் டேங்க் கீழ் பகுதியிலும் அதே கோல்டு கலர் உள்ளது.

ஆனால், சுவாரஸ்யமான வகையில் இந்த பைக் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் நம்பர் பிளேட்டுடன் இருக்கிறது. இதற்கு முன் அனைத்து மாடல்களும் சோதனையின்போது சிவப்பு நிற நம்பர் பிளேட்டுகளுடன்தான் இருந்தன. மேலும் ஹிமாலயன் 450 பைக்கிற்கு "ஹான்லே பிளாக்" என்ற பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Royal Enfield Himalayan 450 Testing Video

இந்த வீடியோ ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் வெளியீடு மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. முன்பக்கத்தில் USD ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. எல்இடி ஹெட்லைட், வட்ட வடிவ டிஜிட்டல் எல்சிடி டிஸ்ப்ளே, புளூடூத், ஹேண்டில்பாரில் சுவிட்ச் கியர் ஆகிய அம்சங்களும் இந்த பைக்கில் இருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பைக்கின் இறுதி சோதனையை முடித்த வீடியோவைப் பகிர்ந்தது. ராயல் என்ஃபீல்டு தலைமை நிர்வாக அதிகாரி, பி. கோவிந்தராஜன் மற்றும் பிற பணியாளர்கள் இந்தியாவின் மிக உயரமான மோட்டார் சைக்கிள் பாதையான உம்லிங் லாவை அடைவதை வீடியோ காட்டுகிறது. சென்னை, ஒரகடத்தில் உள்ள நிறுவனத்தின் ஆலையில் இருந்து லடாக்கில் 19,024 அடி உயரத்தில் உள்ள உம்லிங் லா வரை சுமார் 5,000 கி.மீ.க்கு பைக்கை ஓட்டிச் சென்று சோதனை செய்துள்ளனர்.

Latest Videos

click me!