ஏர்டெல்லை அடிச்சுத் தூக்கும் ரிலையன்ஸ் ஜியோ! வேற லெவலில் புதிய ஃபைபர் பிராட்பேண்ட் பிளான்!

First Published | May 12, 2024, 10:51 AM IST

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ரூ.888 ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர் ஃபைபர் திட்டத்தில் நெட்ஃபிக்ஸ் உள்பட 14 OTT தளங்கள் இலவசமாகக் கிடைக்கும். நெட்ஃபிக்ஸ் சந்தா கொண்ட மிகவும் மலிவான திட்டம் இதுதான்.

ரிலையன்ஸ் ஜியோ தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.888 விலையில் புதிய ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர் ஃபைபர் திட்டம் நெட்ஃபிக்ஸ் உள்பட 14 OTT தளங்களை இலவசமாக வழங்குகிறது. இலவசமாக நெட்ஃபிக்ஸ் சந்தா வழங்குவதில் இது மிகவும் மலிவான திட்டமாகும்.

ஜியோ ஃபைபர் ரூ.888 திட்டத்தில் 30mbps வேகத்தில் 3300GB வரை வரம்பற்ற டேட்டா கிடைக்கிறது. ஜியோ ஏர் ஃபைபர் திட்டத்தில் 1TB என டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டம் 1 மாதத்திற்கு செல்லுபடியாகும். இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக, அமேசான் பிரைம் லைட், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் 12 மற்ற OTT சந்தாக்களும் கூடுதல் கட்டணமின்றி கிடைக்கும்.

Latest Videos


புதிய ரூ.888 திட்டம் தவிர, ரூ.1,499 திட்டம் மற்றும் அதற்கு மேல் விலை உள்ள திட்டத்துடனும் நெட்ஃபிக்ஸ் சந்தாவும் கிடைக்கிறது. ரூ.399 திட்டத்தில் 30mbs வேகத்தில் வரம்பற்ற டேட்டா ஒரு மாதத்திற்க்குக் கிடைக்கும். இத்துடன் 14 OTT ஆப்ஸ் பெற ரூ.100 அல்லது ரூ.200 க்கு கூடுதலாக ரீசார்ஜ் செய்யலாம்.

ரூ. 699 திட்டத்தில் 100mbps வேகத்தில் அன்லிமிட்டட் டேட்டா கிடைக்கிறது. கூடுதல் OTT சந்தாவுக்கு ரூ.200 செலுத்த வேண்டும். ரூ. 999 திட்டம் OTT சந்தாவுடன், 150Mbps வேகத்தில் அன்லிமிட்டட் டேட்டா மற்றும் போன் கால்களை வழங்குகிறது.

ரூ.1,499 திட்டத்தில் 300Mbps வேகத்தில் அன்லிமிட்டட் டேட்டாவுடன் Netflix உள்பட 14 OTT சந்தா கிடைக்கும். ரூ.2,499 திட்டம் 500Mbps வேகத்தில் டேட்டா மற்றும் 14 OTT சந்தாக்களை உள்ளடக்கியது.

ரூ.3,999 மற்றும் ரூ.8,499 விலை கொண்ட இரண்டு திட்டங்களும் 1Gbps ஹை ஸ்பீடு டேட்டாவை வழங்குகின்றன. ரூ.3,999 திட்டத்திற்கான FUP வரம்பு 3300GB. ரூ.8,499 திட்டத்திற்கு FUP வரம்பு 6600GB.

click me!