Mother's Day : நாளை அன்னையர் தினம்.. அம்மாவுக்கு கிப்ட் கொடுக்க விரும்புறீங்களா? இதோ நச்சுனு 4 Tech Gadgets!

First Published | May 11, 2024, 7:05 PM IST

Mother's Day : நாளை மே 12ஆம் தேதி உலக அளவில் அன்னையர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் உங்கள் அன்னைக்கு சிறந்த பரிசு கொடுக்க ஆவலாக இருக்கும் அனைவருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும்.

Apple watch 9 series

மாடர்ன் அம்மாக்களுக்காக ஒரு அருமையான பரிசு 

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 : இது சைகை கட்டுப்பாடு போன்ற பல ஸ்மார்ட் அம்சங்களுடன் விரிவான சுகாதார கண்காணிப்பு திறன்களை அளிக்கின்றது. ஸ்டைலாக மட்டுமல்லாமல் மிகவும் பயனுள்ள ஒரு பரிசாகவும் இது இருக்கும். அன்னையர்கள் விரும்பும் 5 வண்ணங்களிலும் இது கிடைக்கும். 38,000 ரூபாய் முதல் இது இந்திய சந்தையதில் விற்பனைக்கு வருகின்றது.

இந்தியாவில் இருந்து புதிய சாட்போட்! 98 மொழிகளில் பதில் சொல்லும் ஹனுமன் AI!

Galaxy Buds FE

ரம்யமான பாடல்களை கேட்க ஒரு இசைக்கருவி 

Galaxy Buds FE : Galaxy எப்போதுமே சுற்றுச்சூழல் அமைப்புடன் இணக்கமானது என்பதை அனைவரும் அறிவோம். அதுவும் இந்த Galaxy Buds FE உயர்தர ஒலி மற்றும் சுற்றுப்புற சத்தத்தை ரத்துசெய்யும் திறன்களை கொண்டுள்ளது. இது தெளிவான மற்றும் ஆழ்ந்து கேட்கும் அம்சம் நமது அம்மாக்களுக்கு ஏற்றதாக அமைகிறது. 5000 முதல் இது விற்பனைக்கு வருகின்றது.

Tap to resize

Amazon Kindle

அதிகம் படிக்கும் அம்மாக்களுக்கு ஒரு அன்பு பரிசு 

அமேசான் கிண்டேல் : புத்தகங்களை அதிகம் வாசிக்கும் பழக்கம் உள்ள அம்மக்களுக்கு ஒரு அருப்புதமான மாடர்ன் புத்தகம் தான் Amazon Kindle 10th Gen. இது மிகவும் இலகுவான எடையில், பல மோட்களில் வெளிச்சம் தரும் ஹை டெக் புத்தகமாகும். இதன் விலை சுமார் 8000 ரூபாய் ஆகும்.

Nokia g42 5g

குறைந்த விலையில் ஒரு ஸ்மார்ட் போன் 

நோக்கியா G42 5G : ஸ்மார்ட் போன் பயன்படுத்தாத மனிதர்களே இல்லை என்று கூறலாம். ஆனால் நமது அன்னையை பொறுத்தவரை மலிவு விலை போன்களை மட்டுமே எதிர்பார்ப்பார்கள். அந்த வகையில் இந்த நோக்கியா போன் மிகவும் குறைந்த விலையில் ஒரு 5G போனாக உள்ளது. பல ஸ்மார்ட் போன்களில் உள்ள நல்ல பல அம்சங்களும் இதில் உள்ளது. இதன் ஆரம்ப விலை சுமார் 10,000 ரூபாய்.

வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய சக்திவாய்ந்த சூரியப் புயல்; பவர் கிரிட்கள் செயலிழக்க வாய்ப்பு!

Latest Videos

click me!