50MP கேமரா + 4K வீடியோ… Redmi Note 15 Pro-ல மாஸ் அம்சங்கள்!

Published : Jan 19, 2026, 04:31 PM IST

இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் Redmi Note 15 Pro சீரிஸ், 2026 ஜனவரியில் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரிஸில் MediaTek Dimensity 7400 சிப்செட், 7000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
14

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான Xiaomi, தனது Redmi Note 15 சீரிஸை ஐரோப்பா உள்ளிட்ட சில உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்திய பயனர்கள் அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கும் Redmi Note 15 Pro சீரீஸ் இன்று நாட்டில் விற்பனைக்கு வரவில்லை. இந்நிலையில் புதிய தகவலின்படி, 2026 ஜனவரி மாத இறுதியில் இந்த சீரிஸ் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, ஒரு டிப்ஸ்டர் X (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில், ஜனவரி 27 அன்று இந்தியாவில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸில் Redmi Note 15 Pro மற்றும் Redmi Note 15 Pro+ மாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24

வரவிருக்கும் Redmi Note 15 Pro மாடலில் MediaTek Dimensity 7400 சிப்செட் வழங்கப்படலாம். அடிப்படை வேரியண்டில் 8GB RAM இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 6.83 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் போன்ற அம்சங்களுடன் குறைந்த பெசல்களும் கிடைக்கும். கேமரா பகுதியில் 50MP பிரதான கேமரா, 8MP அல்ட்ரா வைட் கேமரா, LED ஃபிளாஷ் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் (30fps) ஆகியவை இடம்பெறக்கூடும்.

34

பேட்டரி விஷயத்தில் இந்த போன் பெரிய அப்டேடாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. காரணம், இதில் 7000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இடம்பெறும் வாய்ப்பு உள்ளது. மேலும், 5G கனெக்டிவிட்டி உறுதியாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது. ஆனால் இந்த சீரிஸின் விலை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. Redmi Note 15 Pro+ மாடலின் விலையும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

44

இதற்கிடையில், இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான Redmi Note 15 5G மாடல் நல்ல கவனம் பெற்றுள்ளது. இதில் 6.77 இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, 120Hz, 3200 nits பிரைட்னஸ், Snapdragon 6 Gen 3 சிப்செட், 108MP கேமரா, 5520mAh பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த போனின் 8GB/128GB விலை ரூ.22,999 மற்றும் 8GB/256GB விலை ரூ.24,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories