கூகுள் தனது பயனர்களுக்கு ஜிமெயில் பயனர்பெயரை மாற்றும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்தின் போது உங்கள் பழைய மின்னஞ்சல்கள் மற்றும் கோப்புகள் பாதுகாப்பாக இருக்கும்.
புனைப்பெயர் அல்லது பிறந்த தேதியுடன் முன்பே உருவாக்கிய பழைய ஜிமெயில் ஐடி காரணமாக பலரும் இன்று தொழில்முறை வாழ்க்கையில் சற்றே சங்கடம் அடைகிறார்கள். இதற்கு தீர்வாக கூகுள் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜனவரி 17, 2026 முதல் உலகளவில் படிப்படியாக வெளியிடப்பட்டது இந்த அப்டேட் மூலம், பயனர்கள் @gmail.com-க்கு முந்தைய பகுதியை (பயனர்பெயர்) மாற்றிக் கொள்ள முடியும். பல ஆண்டுகளாக “ஜிமெயில் ஐடி மாற்ற முடியாதா?” என்று கேட்டவர்களுக்கு இது பெரிய நிம்மதியாக பார்க்கப்படுகிறது.
இதுவரை ஒருமுறை உருவாக்கிய ஜிமெயில் முகவரி மாற்ற முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது முதன்மை மின்னஞ்சல் முகவரியை மாற்றும் வசதி வருவதால், பழைய பாணி முகவரிகளை புதுப்பித்து தொழில்முறைக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ளலாம். முக்கியமாக, ஜிமெயில் ஐடி மாற்றும்போது பழைய மின்னஞ்சல்கள், கூகுள் டிரைவ் கோப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை அழிந்து விடுமோ என்ற பயம் தேவையில்லை. உங்கள் கணக்கில் உள்ள உள்ளடக்கங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று கூகுள் உறுதி செய்துள்ளது.
22
ஜிமெயில் முகவரி மாற்றும் வசதி
அதே நேரத்தில், இந்த வசதி முழுமையாக கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படுகிறது. ஒருமுறை ஐடியை மாற்றிய பிறகு, அடுத்த 12 மாதங்கள் மீண்டும் மாற்ற முடியாது. மேலும் ஒரு கூகுள் கணக்கின் வாழ்நாளில் மூன்று முறை மட்டுமே @gmail.com-க்கு முன் இருக்கும் முதன்மை பெயரை மாற்ற அனுமதி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாறி குழப்பம் உருவாகாமல் தடுப்பதற்காக இந்த வரம்புகள் அடிக்கடி வைக்கப்பட்டுள்ளன.
ஜிமெயில் முகவரியை மாற்ற விரும்பினால், டெஸ்க்டா பிரவுசரில் myaccount.google.com/google-account-email பக்கத்துக்குச் சென்று உங்கள் கணக்கில் லாகின் செய்ய வேண்டும். பிறகு தனிப்பட்ட தகவல் → மின்னஞ்சல் → Google கணக்கு மின்னஞ்சல் என்பதைத் தேர்வு செய்தால், Google கணக்கு மின்னஞ்சலை மாற்று என்ற ஆப்ஷன் காட்டப்படும். இந்த விருப்பம் உடனே தெரியவில்லை என்றால், அப்டேட் கிடைக்கும்போது விரைவில் தோன்றும் என தெரிகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.