பழைய ஈமெயில் ஐடி பிடிக்கலையா?" கவலை வேண்டாம்! டேட்டா அழியாமல் ஜிமெயில் முகவரியை மாற்றலாம்

Published : Jan 18, 2026, 09:00 AM IST

Gmail கூகுள் பயனர்கள் இனி தங்களது பழைய ஜிமெயில் முகவரியை (Gmail Address) மாற்றிக்கொள்ளலாம். பழைய மெயில், புகைப்படங்கள் மற்றும் டேட்டா எதுவும் அழியாமல் இதை எப்படிச் செய்வது? முழு விவரம் உள்ளே.

PREV
16
Gmail

"சிறு வயதில் விளையாட்டாக வைத்த ஜிமெயில் ஐடி இப்போது அவமானமாக இருக்கிறதா? மாற்ற நினைத்தால் எல்லா டேட்டாவும் போய்விடுமே என்று கவலையா?" இனி அந்தக் கவலை தேவையில்லை!

பலரும் பள்ளி, கல்லூரி காலங்களில் cooldude123@gmail.com அல்லது angelpriya@gmail.com என்பது போன்ற விசித்திரமான பெயர்களில் ஜிமெயில் கணக்கை உருவாக்கியிருப்போம். ஆனால், வேலைக்குச் செல்லும்போது அந்த ஐடி-யைப் பயன்படுத்தத் தயக்கமாக இருக்கும். புதிய அக்கவுண்ட் தொடங்கினால், பழைய மெயில்கள், டிரைவ் பைல்கள் (Google Drive Files) மற்றும் போட்டோக்கள் (Photos) எல்லாம் போய்விடுமே என்ற பயம் இருக்கும்.

இந்தப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை கூகுள் நிறுவனம் இப்போது கொண்டு வந்துள்ளது.

26
என்ன அது புதிய வசதி?

கூகுளின் புதிய அறிவிப்பின்படி, நீங்கள் புதிய அக்கவுண்ட் உருவாக்காமலேயே, உங்களது பழைய ஜிமெயில் முகவரியை (Username) மாற்றிக்கொள்ள முடியும்.

மிக முக்கியமாக, இப்படி மாற்றும்போது உங்கள் பழைய அக்கவுண்டில் உள்ள:

• ஈமெயில்கள் (Emails)

• கூகுள் போட்டோஸ் (Photos)

• கூகுள் டிரைவ் கோப்புகள் (Files)

• அக்கவுண்ட் ஹிஸ்டரி (History)

எதுவுமே அழியாது. அனைத்தும் அப்படியே இருக்கும்!

36
இது எப்படி வேலை செய்கிறது?

நீங்கள் ஜிமெயில் முகவரியை மாற்றியதும், உங்களின் பழைய முகவரி ஒரு 'Alias' (மாற்றுப் பெயர்) ஆக மாறிவிடும்.

• உங்கள் பழைய முகவரிக்கு யாராவது மெயில் அனுப்பினால், அது உங்கள் புதிய முகவரிக்கே வந்து சேரும்.

• ஜிமெயில், யூடியூப் (YouTube), மேப்ஸ் (Maps) என எதில் லாகின் (Login) செய்யவும் பழைய அல்லது புதிய ஐடி இரண்டையுமே பயன்படுத்தலாம்.

• உங்கள் பழைய முகவரியை வேறு யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. அது உங்களுடனே இணைந்திருக்கும்.

46
முக்கிய நிபந்தனைகள் (தெரிந்துகொள்ள வேண்டியவை)

இந்த வசதியைப் பயன்படுத்தும் முன் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்:

1. வருடத்திற்கு ஒரு முறை: ஜிமெயில் முகவரியை மாற்றினால், அடுத்த ஓராண்டிற்கு அதை மீண்டும் மாற்றவோ அல்லது புதிய ஐடியை நீக்கவோ முடியாது.

2. வரம்பு: ஒரு அக்கவுண்டில் அதிகபட்சம் 4 ஜிமெயில் முகவரிகள் வரை இணைக்கலாம்.

3. பழைய காலண்டர்: கூகுள் காலண்டரில் (Google Calendar) ஏற்கனவே உருவாக்கப்பட்ட சில பழைய நிகழ்வுகளில் பழைய மெயில் ஐடியே தொடர்ந்து காட்டப்படலாம்.

56
மாற்றுவது எப்படி? (Step-by-Step Guide)

இந்த வசதி தற்போது படிப்படியாகப் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உங்களுக்குக் கிடைத்துள்ளதா என்று பார்க்கவும், மாற்றவும் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:

1. உங்கள் மொபைல் அல்லது கணினியில் myaccount.google.com/google-account-email என்ற பக்கத்திற்குச் செல்லவும்.

2. இடதுபுறம் உள்ள 'Personal info' என்பதை கிளிக் செய்யவும்.

3. 'Email' என்பதைத் தேர்வு செய்து, அதில் 'Google Account email' என்பதற்குள் செல்லவும்.

4. அங்கே 'Change Google Account email' என்ற பட்டன் இருந்தால், அதை கிளிக் செய்யவும். (இந்த பட்டன் இல்லை என்றால், உங்களுக்கு இன்னும் இந்த வசதி வரவில்லை என்று அர்த்தம்).

5. உங்களுக்குப் பிடித்த புதிய ஜிமெயில் ஐடியை டைப் செய்து, அது கிடைக்கிறதா என்று சரிபார்க்கவும்.

6. 'Change email' என்பதைக் கொடுத்து உறுதி செய்யவும்.

66
புதிய ஐடி

அவ்வளவுதான்! உங்கள் பழைய குப்பைகள் எதுவும் தொலையாமல், புதிய ஐடிக்கு மாறிவிட்டீர்கள்.

இந்த வசதி இன்னும் அனைத்துப் பயனர்களுக்கும் முழுமையாகக் கிடைக்கவில்லை. விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories