Redmi Note 15 5G 108MP கேமராவுடன் ரெட்மி நோட் 15 5ஜி போன் ஜனவரி 6ல் இந்தியாவில் வெளியாகிறது. இதன் விலை, பேட்டரி மற்றும் சிறப்பம்சங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Redmi Note 15 5G ரெட்மி ரசிகர்களுக்கு செம ட்ரீட்! 108MP கேமராவுடன் வரும் 'நோட் 15 5ஜி' - வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி இடம்பிடித்துள்ள சியோமி (Xiaomi), தனது புகழ்பெற்ற ரெட்மி நோட் சீரிஸில் அடுத்த அதிரடி வரவை அறிவிக்கத் தயாராகிவிட்டது. 'ரெட்மி நோட் 15 5ஜி' (Redmi Note 15 5G) என்ற பெயரில் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன், சீனாவில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியச் சந்தையை கலக்க வருகிறது. இந்தத் தொடரில் ஸ்டாண்டர்ட் மாடலைத் தவிர, ரெட்மி நோட் 15 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஆகிய மாடல்களும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
26
ஜனவரி 6-ல் பிரம்மாண்ட அறிமுகம்
சியோமி நிறுவனத்தின் சப்-பிராண்டான ரெட்மி, அண்மையில் இந்த போனின் டீஸர் ஒன்றை வெளியிட்டிருந்தது. டெலிகாம் டாக்ஸ் (Telecom Talks) அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம், அதாவது ஜனவரி 6-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மெலிதான வடிவமைப்புடன் (Slim profile) வரும் இந்த போன், கையில் வைத்துப் பயன்படுத்த மிகவும் சௌகரியமாக இருக்கும் எனத் தெரிகிறது.
36
கேமராவில் செய்யப்பட்ட முக்கிய மாற்றம்
சீனாவில் வெளியான மாடலிலிருந்து இந்திய மாடல் சில முக்கிய வன்பொருள் (Hardware) மாற்றங்களுடன் வருகிறது. சீனாவில் 50MP கேமராவுடன் வெளியான நிலையில், இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 15 மாடல், சக்திவாய்ந்த 108MP முதன்மை கேமராவுடன் வரும் என்று டீஸர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புகைப்பட பிரியர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய நற்செய்தியாகும். இது முந்தைய மாடலான ரெட்மி நோட் 14-ன் கேமரா செட்டப்பை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 6.77-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதியுடன் வருவதால், வீடியோ பார்ப்பதற்கும் கேம் விளையாடுவதற்கும் மிகச் சிறந்த அனுபவத்தைத் தரும். செயல்திறனைப் பொறுத்தவரை, இதில் Qualcomm Snapdragon 6 Gen 3 பிராசஸர் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இது அன்றாடப் பயன்பாட்டிற்கும், மல்டி டாஸ்கிங்கிற்கும் ஏற்றதாக இருக்கும்.
56
பேட்டரி மற்றும் சாஃப்ட்வேர்
நீண்ட நேரம் சார்ஜ் நிற்க வேண்டும் என்பதற்காக, இதில் 5,520mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி வழங்கப்படலாம். இதனை வேகமாக சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இடம்பெறும். மென்பொருளைப் பொறுத்தவரை, ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட லேட்டஸ்ட் HyperOS 2 இயங்குதளத்தில் இந்த போன் செயல்படும்.
66
ரெட்மி 15C - பட்ஜெட் சந்தையில் ஒரு புதிய வரவு
இதற்கிடையில், பட்ஜெட் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 'ரெட்மி 15C' (Redmi 15C) என்ற ஸ்மார்ட்போனை டிசம்பர் 3-ம் தேதி ரெட்மி அறிமுகப்படுத்தியது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி பிராசஸர், 50MP கேமரா மற்றும் 6.9-இன்ச் டிஸ்பிளேவுடன் வந்துள்ள இந்த போன், முந்தைய ரெட்மி 14C மாடலுக்கு மாற்றாகச் சந்தையில் களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.